மண்டல அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக (ZRUCC) நமது சங்கத் தலைவர் திரு N. ஜெகதீசன் தேர்வு
February 12, 2015
மதுரைக்கு அருகே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசுக்கு பரிந்துரைக்குமாறு வேண்டுகோள்
March 2, 2015

சமரச தீர்வு மையங்கள் அவசியம்

Courtஒப்பந்தம், வணிக வழக்குகளை விரைந்து முடிக்க சமரச தீர்வு மையங்களை பயன்படுத்த வேண்டும் என மதுரையில் ஐகோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் வலியுறுத்தினார்.

மதுரையில் தொழில் வர்த்தக சங்கம் மற்றும் இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆப் டெக்னிக்கல் ஆர்பிட்ரேட்டர்ஸ் சார்பில் ‘சமரச தீர்வு மையங்களின் புதிய பரிமாணங்கள்’ தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. ஓய்வு பெற்ற நீதிபதி வெங்கட்ராமன் துவக்கி பேசியதாவது: ஒப்பந்தம், வணிக வழக்குகள் அதிகம் கோர்ட்களில் தேங்கி வருகின்றன.

வழக்குகளை முடிக்க அதிக பணமும், காலமும் தேவைப்படுகிறது. கால விரயம் ஏற்படுவதுடன் பணச்செலவாகிறது. இதை தவிர்க்க சமரச தீர்வு மையங்களில் குறைந்த செலவில், வழக்குகள் விரைவாக முடிக்கப்படுகின்றன என்றார். வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் வரவேற்றார். முதுநிலை துணை தலைவர் சேஷாத்ரி, முன்னாள் தலைவர் வேலு, இந்தியன் இன்ஸ்டிடியூஷன் ஆப் டெக்னிக்கல் ஆர்பிட்ரேட்டர்ஸ் மைய தலைவர் பாலாஜி பங்கேற்றனர். செயலாளர் பாஸ்கர் நன்றி கூறினார். இணை செயலாளர் கண்ணன் ஏற்பாடுகளை செய்தார்.

நன்றி:- தினமலர்