இரயில்வே பட்ஜெட்டிற்கான விரிவான முன் ஆலோசனை
February 9, 2015
சமரச தீர்வு மையங்கள் அவசியம்
February 23, 2015

மண்டல அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராக (ZRUCC) நமது சங்கத் தலைவர் திரு N. ஜெகதீசன் தேர்வு

259AAA9800000578-2950671-image-m-122_1423748297705தென்னக இரயில்வே மதுரைக் கோட்டத்தின் கோட்ட அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழுவின் (Divisional Railway Users’ Consultative Committee – DRUCC) 145-வது ஆலோசனைக் கூட்டம் 12.02.2015-ம் நாள் மதுரையில் நடைபெற்றது.

கோட்ட இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்களால் மண்டல அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழுவிற்கு (Zonal Railway Users’ Consultative Committee – ZRUCC) ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் இக்கூட்டத்தில் நடைபெற்றது.

இத்தேர்தலில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவரும், தென்னக இரயில்வே மதுரைக் கோட்டத்தின் கோட்ட அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான திரு N. ஜெகதீசன் அவர்கள் போட்டியிட்டு அதிக வாக்குகள் பெற்று மண்டல அளவிலான இரயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.