தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் அறிவித்தமைக்கு மத்திய அரசுக்கு பாராட்டு
October 17, 2014
தமிழகத்தில் மின் கட்டணத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தமிழக அரசிற்கு வேண்டுகோள்
December 2, 2014

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்படுத்தப்பட மத்திய அரசு ஒப்புதல் அளித்தமைக்கு வரவேற்பு

delhi-hospitals-doctors-aiimsஅனைத்து சிறப்பு மருத்துவ வசதிகளையும் கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரைக்கு அருகில் தோப்பூரில் அமைத்திட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளமைக்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

2009-ம் ஆண்டே எய்ம்ஸ் மருத்துவமனை மதுரைக்கு அருகே தோப்பூரில் தமிழக அரசுக்கு சொந்தமான 385 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில நிர்வாகத் தாமதம் காரணமாக தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய இந்த அரிய வாய்ப்பு உத்திரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு சென்றுவிட்டது.

கடந்த ஐந்தாண்டுகளாக இந்த அதி நவீன மருத்துவமனை தோப்பூரில் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ரூ.600 கோடி மதிப்பீட்டில் தற்போது மதுரைக்கு அருகே தோப்பூரில் இம்மருத்துவமனை அமைக்கப்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது மிகுந்த மகிழ்வினை அளிப்பதாக உள்ளது.

மதுரைக்கு அருகில் அனைத்து நவீன மருத்துவ வசதிகளையும் கொண்ட இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவது மதுரை மட்டுமன்றி அனைத்து தென் மாவட்ட மக்களுக்கும் குறைந்த செலவில் உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சிகிச்சை பெற வழி வகுக்கும். அத்துடன் தனியான மருத்துவ கல்லூரி மற்றும் சிறப்பு மருத்துவ ஆய்வு மையங்கள் உள்பட பல்வேறு இதர கட்டமைப்புகள் எய்ம்ஸ் மருத்துவமனையுடன் அமைக்கப்படவிருப்பது உயர் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.