தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் DIGIT-ALL அமைப்பு துவக்க விழா
July 15, 2015
Last Speech of Dr. A.P.J. Abdul Kalam in Tamilnadu
August 17, 2015

டிஜிட் ஆல் அமைப்பை தொடங்கி வைத்தார் கலாம்

Digitallopen2நமது சங்கத்தின் 90வது ஆண்டு நிறைவு விழாவுடன் கணினி பயன்பாட்டு விழிப்புணர்வாக புதிதாக தொடங்கப்பட்டுள்ள ‘டிஜிட் ஆல்’ தொடக்க விழாவிற்கு முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மதுரை வருகை தந்து சிறப்பித்தார்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் ‘டிஜிட் ஆல்’ தொழில்நுட்ப பிரிவை தொடங்கி வைத்தார். அவருடன் ‘டிஜிட் ஆல்’ அமைப்பின் தலைவர் திரு.ஜே.கே.முத்து மற்றும் வர்த்தக சங்க தலைவர் ஜெகதீசன் தலைமை தாங்கினார். முதுநிலை தலைவர் திரு.ரத்தினவேல் சிறப்புரையாற்றினார்.

4ae74dee22a888dc2dc68414cda7ee9aமேலும் தொழில்நுட்பத்தை தொடங்கி வைத்த அப்துல் கலாம் பேசியதாவது, தமிழக வளர்ச்சிக்கு சிறந்த பங்களிப்பை அளிக்கிறீர்கள். “ஊரணிக்கு உயிர் கொடுப்போம்”. ‘டிஜிட் ஆல்’ தொழில்நுட்பம் மூலம் தொழில்முனைவோருக்கு கணினி, சமூக வலைத்தள அறிவை கற்பிக்க வேண்டும். தற்போது ‘பிக்டேட்டா’ முறை வளர்ச்சி கண்டுள்ளது. இதன்மூலம் தேவையான தகவல்களை உடனுக்குடன் பெற முடியும். மதுரை மல்லிகைக்கு உலகளவில் ‘பிராண்ட்’ செய்து சந்தை வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.

b0176b717b46da13db2509d36155ae52இந்தியா 20க்கு 20 திட்டத்தின் மூலம் பொருளாதார வளர்ச்சியடையும். கிராமங்களை ஒருங்கிணைந்த பன்மூக பொருளாதார வளர்ச்சி பெற்றதாக மாற்ற முடியும் என கலாம் தெரிவித்தார்.

செயலாளர் ராஜமோகன், பொருளாதாரர் ஜீயர்பாபு , முன்னாள் ஜனாதிபதியின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நீதிமோகன்
நன்றியுரை கூறினார்.