சேவை அறியும் உரிமைச் சட்டத்தை இயற்றி நடைமுறைப்படுத்த வேண்டுகோள்
March 11, 2015
தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் 90-வது ஆண்டு நிறைவு விழா மற்றும் DIGIT-ALL அமைப்பு துவக்க விழா
July 15, 2015

உயர் நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டுகோள்

1. downloadசரக்கு மற்றும் சேவை வரி (GST) 01.04.2016 முதல் நாடு முழுவதும் அமலாக்கப்படவிருக்கும் சூழலில் இப்புதிய வரிச் சட்டத்தின் கீழ் வரி விலக்கிற்கும், வரிச் சலுகைகளுக்கும், புதிய வரி வீதங்களை நிர்ணயம் செய்வதற்கும் தக்க ஆலோசனைகளை அரசு பெற வர்த்தக சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஓர் உயர் நிலை ஆலோசனைக் குழுவை ஏற்படுத்த வேண்டும்:

மத்திய, மாநில அரசுகள் அமல்படுத்தி வரும் கலால் வரி, சேவை வரி, மத்திய விற்பனை வரி, மதிப்புக் கூட்டு வரி போன்ற பல்வேறு மறைமுக வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரியாக 01.04.2016 முதல் நாடு முழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி (GOODS AND SERVICES TAX) அமலாக்கப்படவிருக்கிறது. ஏற்கனவே ஒரு பொருளுக்கு விதிக்கப்பட்ட மொத்த வரியை சமன்படுத்தும் வகையில் இப்புதிய சட்டத்தின் கீழ் வரி வீதங்களை (REVENUE NEUTRAL RATE (RNR)) நிர்ணயிப்பதுதான் அடுத்த முக்கியமான பணி. ஏற்கனவே கலால் வரிக்கு உட்பட்ட பொருட்களுக்கு அதற்கேற்ப கூடுதலான வரியும், கலால் வரிக்கு உட்படாத குறிப்பாக வேளாண் பொருட்களுக்கு குறைந்த வரி விகிதமும், மிகவும் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பொருட்களுக்கு வரி விலக்கும் நிர்ணயிக்கப்பட வேண்டும். நம் மாநில வரி வருவாயும் குறையாமல் அதே நேரம் நம் மாநில தொழில் வணிகமும் பாதிக்காத வகையில் தக்க ஆலோசனைகள் வழங்க முக்கிய வர்த்தக சங்கப் பிரதிநிதிகளை உள்ளடக்கிய “சரக்கு மற்றும் சேவை வரி மாநில ஆலோசனைக் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க வேண்டும். வரி விலக்கிற்கும், வரிச் சலுகைகளுக்கும் உள்ளிட்ட பொருட்களையும், மேலே குறிப்பிட்ட RNR வரி வீதத்தை நிர்ணயிப்பதற்கும் இக்குழு சிறந்த ஆலோசனைகளை வழங்க முடியும். இப்புதிய வரிச்சட்ட அமலாக்கத்தின்போது வரி செலுத்தும் தொழில் வணிகத் துறையினருக்கு அவ்வப்போது ஏற்படும் சந்தேகங்களை அரசு அதிகாரிகளுடன் விவாதித்து தக்க முடிவுகள் எடுத்து இவ்வரிச் சட்ட அமல் சுமூகமாக இருக்க இந்த ஆலோசனைக் குழு பெரிதும் உதவிகரமாக இருக்கும்.

2. மாநில மதிப்புக் கூட்டு வரியின் கடைசி ஆண்டான 2015-2016-ம் ஆண்டில் அச்சட்டத்தில் உள்ள சில முரண்பாடுகளையும், சிரமங்களையும் நீக்க வேண்டுகோள்:

14-வது நிதிக் கமிஷன் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று தனது மொத்த வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை 10 சதவீதம் உயர்த்தி (32 %-லிருந்து 42%) மத்திய வரவு செலவுத் திட்டத்தில் அறிவித்துள்ள சூழலில் அடியிற்கண்ட தமிடிநநாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டத்தில் உள்ள சில நடைமுறைப் பிரச்னைகளையும், முரண்பாடுகளையும் நீக்க வேண்டும். அவ்வாறு நீக்குவதால் ஒரளவு வரி வருவாடீநு குறைவு ஏற்பட்டாலும் கிடைக்கும் கூடுதல் மத்திய நிதியை கருத்தில் கொண்டு தமிழகத்தில் தொழில் வணிக வளர்ச்சியைக் கருதி அதைப் பொருட்படுத்தக் கூடாது எனவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

A) CROSS VERIFICATION என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுவதற்கு முடிவு கட்ட வேண்டும்:

மதிப்புக் கூட்டு வரி முறை 01.01.2007 முதல் அமலாக்கப்பட்ட கால கட்டங்களில் வணிக வரித்துறைக்கு ரிட்டர்ன் படிவங்கள் எழுதித்தான் சமர்ப்பிக்கப்பட்டன. அதன் பின் ONLINE மூலம் RETURN சமர்ப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது சமீபத்தில் அதிலும் ஆரம்ப காலத்தில் வணிக வரித்துறையின் SOFTWARE-ல் பல குழப்பங்கள் இருந்தன. அதிகாரிகளும் சரியான வழிகாட்டுதல்கள் வழங்கவில்லை. சரக்கை விற்றவர்கள், வாங்கியவர்களின் பெயர்களைத் தனித்தனியாகக் குறிப்பிடாமல் மொத்த விற்பனைத்தொகையாகக் RETURN-ல் குறிப்பிட்டுள்ளார்கள. ONLINE FILLING வந்த பிறகும் கூட TIN எண் இல்லாமல் சரக்கை வாங்கியவர்களின் பெயர்களை மட்டும் குறிப்பிட்டிருந்தாலும் SOFTWARE ஏற்றுக்கொண்டுள்ளது. அதை எல்லாம் சமீப காலத்தில்தான் வணிக வரித்துறை மேம்படுத்தியுள்ளது. இப்போது ONLINE மூலம் RETURN சமர்ப்பிப்பது அனைவருக்கும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்த யதார்த்த நிலையை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் CROSS VERIFICATION என்ற பெயரில் பல ஆண்டுகளுக்கு முன் சரக்குகள் வாங்கி INPUT TAX CREDIT எடுத்து சரக்கை வாங்கியவர் சமர்ப்பித்த படிவத்தை, சரக்கை விற்றவர் சமர்ப்பித்த படிவத்துடன் ஒப்பிட்டு பெயர்களையும், தொகையையும் நேர் செய்ய வலியுறுத்துவது எவ்வாறு நியாயமாகும்? வணிகர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். அதிலும் பெயர் சரியாக இருந்து TIN எண் இல்லாமல் இருந்தால் அதையும் ஏற்றுக்கொள்வதில்லை. ஒவ்வொரு அதிகாரியும், ஒவ்வொரு விதமாக விபரங்கள் கேட்கிறார்கள். வரிக்குட்பட்ட விற்பனைத் தொகையை சரக்கை விற்றவரும், வாங்கியவரும் ஒப்புக்கொண்டு அந்த விற்பனைத் தொகைக்கு சரக்கை விற்றவர் வரி செலுத்தியதற்கான விபரம் கொடுத்தாலே போதுமானது தானே. எனவே இந்த மாதிரியான சிரமங்களுக்கு முடிவு கட்டும் வகையில் CROSS VERIFICATION-க்கு தெளிவான வெளிப்படையான நடைமுறைகளை வர்த்தகர்களிடம் கலந்து பேசி முறைப்படுத்துவதோடு, வணிக வரித் துறையின் SOFTWARE முழுமையாக சீரமைக்கப்படுவதற்கு முந்தைய காலத்திற்கு இத்தகைய CROSS VERIFICATION செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

B) வாட் வரிச் சட்ட விதிகளில் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட திருத்தத்தினால் பிற மாநில விற்பனையே (Interstate Sale) தடைப்பட்டுள்ளது;

நம் மாநிலத்தில் தொழில் துவங்க தயங்குகிறார்கள்: “C” படிவத்துடனான வெளி மாநில விற்பனைக்கு 2% மட்டுமே மத்திய விற்பனை வரி என்பது வெளிமாநில விற்பனையை ஊக்குவிப்பதற்காக வழங்கப்படும் சலுகை. ஆனால் நம் மாநிலத்தில் அவ்வாறான விற்பனையில் மேற்கொண்டு 3% உள்ளீட்டு வரி வரவை (ITC) கழித்துக் கொள்ள வேண்டும் (REVERSE) என்று வலியுறுத்தப்படுகிறது. “C” படிவத்துடன விற்றாலே 5% வரி என்றாகிவிடுகிறது. மத்திய அரசு கொடுத்த வரிச் சலுகை மறுக்கப்படுகிறது. அத்துடன் “C” படிவம் இல்லாவிட்டால் மாநில விற்பனை வரி வீதப்படி (5% / 14½ %) மத்திய விற்பனை வரி விதிப்பதுடன், அச்சரக்கிற்கான உள்ளீட்டு வரவு முழுவதையும் கழிக்க வேண்டும் எனவும் இரட்டைத் தண்டனை விதிக்கப்படுகிறது. இத்தகைய விதிகள் வேறு எந்த மாநிலத்திலும் இல்லை. இதனால் நம் மாநிலத்திலிருந்து வெளிமாநில விற்பனை பாதிக்கப்படுகிறது. சிறு தொழில் துறை தங்கள் பொருட்களை வெளி மாநிலங்களில் விற்பனை செய்ய இயலாமல் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அத்துடன் நம் மாநிலத்தில் தொழிற்சாலைகள் துவங்கும் ஆர்வமும் குறைகிறது. எனவே இந்தத் திருத்தம் உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

C) ஆண்டுப் படிவம் WW சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும்:

தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்ட பிரிவு எண் 63 (a) -யின்படி ரூ. 1 கோடிக்கு மேல் ஆண்டு மொத்த விற்பனைத் தொகை உள்ள வணிகர்கள் ஆண்டு அறிக்கைப் படிவம் WW பூர்த்தி செய்து தகுதி பெற்ற பட்டைய தணிக்கையாளர்களைக் கொண்டு பரிசீலனைக்கு உட்படுத்தி அவரின் கையொப்பத்தைப் பெற்று ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டிய விபரங்களில் பெரும்பாலானவை வணிகர்கள் சமர்ப்பிக்கும் மாதாந்திர கணக்குப் படிவங்களிலிருந்தே அதிகாரிகளால் அறிந்துகொள்ள முடியும். எனவே ஆண்டுப் படிவம் WW தேவையற்றது. வணிகர்களுக்கு கூடுதலான எழுத்துச் சுமையையும், ஆடிட்டருக்கு கூடுதலாகச் செலுத்த வேண்டிய கட்டண சுமையையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே ரூ. 1 கோடிக்கு மேல் ஆண்டு மொத்த விற்பனைத் தொகை உள்ள வணிகர்கள் கட்டாயமாக தணிக்கை அறிக்கைப் படிவம் WW சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனையை ரத்து செய்ய வேண்டும். வணிகர்கள் இந்தப் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டிய அவசியமே இல்லை. இதுபோன்ற கூடுதலான தேவையற்ற எழுத்து வேலைகளும், நிபந்தனைகளும் நம் மாநில தொழில் வணிகத் துறையை உற்சாகமிழக்கச் செய்கிறது.

D) WW படிவம் தாக்கல் தாமதத்திற்கு ரூ. 1000 மட்டுமே காம்பவுண்டிங் கட்டணம் விதிக்கப்பட வேண்டும்:

படிவம் WW தாமதமாக தாக்கல் செய்யும் வணிகர்களுக்கு COMPOUNDING FEES ரூ. 10,000/- செலுத்துமாறு அதிகாரிகளிடமிருந்து அறிவிப்புகள் அனுப்பப்படுகின்றன. நியாயமான காரணம் இருந்தாலும் கூட குறைந்த COMPOUNDING FEE விதிக்க முடியாது என்றும், முழுத்தொகையையும் அபராதமாக விதிக்க வேண்டும் என்று தங்களுக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து தகவல் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மதிப்புக் கூட்டு வரிச் சட்டப்படி தவறு மற்றும் விடுதல் ஏதேனும் தென்பட்டால் அதிகபட்சமாக COMPOUNDING FEE ரூ.10,000/- விதிக்கலாம் என்றுதான் கூறப்பட்டுள்ளது. வணிகர்கள் தணிக்கையாளர்களுக்குக் கட்டணம் செலுத்தித்தான் படிவம் WW சான்று பெற்று சமர்ப்பிக்கிறார்கள். அதில் சில சமயம் காலதாமதம் ஏற்படுகிறது. மேலும் தொழில் வணிக மந்த நிலை காரணமாக வணிகர்கள் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். எனவே WW படிவத்தை தாமதமாக தாக்கல் செய்த வணிகர்களுக்கு COMPOUNDING FEE ரூ. 1000/- (ரூபாய் ஆயிரம்) மட்டுமே விதிக்க அறிவுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

E) புதிய இணைப்புப் படிவம் V நீக்கப்பட வேண்டும்:

வணிகர்கள் சமர்ப்பிக்கும் மாதாந்திர படிவம் I உடன் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இணைப்பு V-ல் ஒவ்வொரு மாதமும் மாத இறுதி இருப்புச் சரக்கு மதிப்பை (Closing Stock Value ) தெரிவிப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன. வணிகவரி ஆணையர் 03.12.2013-ம் நாள் 12 / 2013 எண் சுற்றறிக்கையின் மூலம் வணிகவரி அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல்களை அனுப்பியுள்ளார். அதில் அவரே சில முரண்பாடுகளை சுட்டிக் காண்பித்துள்ளார். இன்னும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். எனவே, தேவையற்ற இந்த இணைப்புப் படிவம் V-ஐ ரத்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

F) WORKS CONTRACT ON COOLY PRINTING – LABOUR CHARGES TO BE FIXED AS 70% FOR THE PURPOSE OF LEVING ON BALANCE 30%. Works contract of cooly printing is covered under Sec.5 of the VAT Act. But when the value of input cannot be ascertained from the book of accounts Rule 8(5) d is made applicable, allowing 30% only towards labour charge under “all other contracts”. There is no separate clause for printing contract. For dyeing contract, labour charges are allowed as 50%. In printing industry the value of inputs, (printing ink) does not exceed 30% and the balance 70% is labour charges. So, we request the Government of Tamilnadu to insert a separate clause for printing contract and fix the charges as 70%. If it is not possible it should be fixed as 50% just like dyeing contract as it is similar in nature and mode of execution. Dyes are applied on cloth, whereas the printing ink is applied on paper.

G) தணிக்கை செய்வதற்காக வணிக நிறுவனங்கள் ஆறு ஆண்டுகளுக்குப் பதிலாக இரண்டு ஆண்டு கணக்குகளை பராமரித்தால் போதுமானது என்று அறிவிக்க வேண்டும்:

தணிக்கை (Audit) செய்வதற்காக வணிக நிறுவனங்களுக்கு வருவதாகவும் 6 ஆண்டு கால கணக்குகளை எடுத்து வைக்கும்படியும் சில வணிகர்களுக்கு அதிகாரிகள் அறிவிப்பு அனுப்புகின்றனர். ஆறு ஆண்டுகால கணக்குகளை வணிகர்கள் சட்ட விதிகளின்படி பராமரிப்பது அவசியம் என்றாலும் அசெஸ்மென்ட் முடிந்த பல ஆண்டுகளுக்கு முந்தைய கணக்குகள் குறித்த வினாக்களுக்கு உடனடியாக பதிலளிப்பது மிகவும் சிரமம். சில நிறுவனங்களில் அப்போதிருந்த கணக்காளர் (Accountant) நிகழ்காலத்தில் பணியில் இருப்பதில்லை. இவ்வளவு நீண்ட காலம் கணக்கீடுகளைப் பராமரிக்க போதிய இடவசதி பலரிடம் இல்லை. இன்றைய Digital உலகில் எல்லாம் Online ஆகிவிட்ட சூழலில் இத்தனை ஆண்டு காலம் கணக்குகள் வைத்திருக்க வேண்டுமா? நிறைய சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே கணக்குகளை Assessment செய்த தேதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் பராமரித்தால் போதுமானது என விதிகள் இருப்பதுதான் முறையாக இருக்கும்.

H) சரக்கு வாகனங்கள் மற்றும் நிறுவனங்களில் சோதனை இடுவதற்கான நடைமுறை – லஞ்ச ஊழல் குற்றச் சாட்டுக்கு வணிகவரி அதிகாரிகள் உட்படாமல் இருக்கவும், வணிகர்கள் தொல்லைகளுக்கு உட்படாமல் இருக்கவும் ஆலோசனைகள்:

1) வணிகவரித் துறை செயலாக்கப் பிரிவு (Enforcement) அதிகாரிகள் நிறுவனங்களில் ஆய்வு (Raid) செய்யும்பொழுதும், சாலைகளில் சரக்கு வாகன சோதனைகளில் ஈடுபடும்பொழுதும் சரக்கின் உரிமையாளர் அதிகாரியின் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளிக்கும் நோட்டீஸ் (Show Cause Notice) தருமாறு கேட்டால், அவ்வாறு அளித்து கோப்புகளை மேல் நடவடிக்கைக்காக அந்த வணிகரின் சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அந்த இடத்திலேயே அட்வான்ஸ் வரி, அபராதம் அல்லது COMPOUNDING FEE வசூலிக்க அனுமதிக்கக் கூடாது. செயலாக்கப் பிரிவுக்கு பணம் வசூல் செய்யும் அதிகாரம் கூடாது.

2) சோதனையில் ஈடுபடும் வணிகவரி அதிகாரிகள் அதே இடத்தில் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி பதில் கொடுக்க வணிகருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்காமல் அந்த இடத்திலேயே தீர்ப்பையும் சொல்லி, அங்கேயே அதை அமலாக்கம் செய்யும் வகையில் பணத்தையும் வசூல் செய்வது சட்ட விரோதமாகும். எந்த சட்ட விதிகளிலும் கேள்விப்படாத இந்த நடைமுறையை ரத்து செய்ய வேண்டும்.

3) அவ்வாறான ஆய்வு மற்றும் சோதனையின்போது அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் “எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது” (Do’s and Don’ts) என்ற அறிவுரைகளை வெளியிடப்பட வேண்டும்.

4) வாகன சோதனையின்போது சரக்கின் பில் தேதியன்றே சரக்கு அனுப்பப்பட வேண்டும் என்றும், பில்லில் உள்ள சரக்கின் அளவு வாகனத்தில் இருக்க வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தி அபராதம் வசூலிக்கிறார்கள். இது நடைமுறை சாத்தியமல்ல. மொத்தமாகச் சரக்கை வாங்கிய பிறகு வாகனம் கிடைப்பதற்கு மூன்று நான்கு நாட்கள் கூட ஆகலாம். சிறிய வாகனம் கிடைத்தால் பில்லில் உள்ள சரக்கைவிட குறைத்துத்தான் ஏற்றி அனுப்ப முடியும். நடைமுறை வியாபார சிரமங்களை உணர்ந்து தக்க அறிவுரைகளை அதிகாரிகளுக்கு அனுப்புவதுடன் வணிகர்களுக்கும் தெரிவிக்க வேண்டும்.

5) தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, வணிகர் எங்கிருந்தாலும் எந்த வணிகவரி அதிகாரியுடனும் தொடர்பு கொண்டு மொபைல் போனில் பேசி விளக்கம் தரவும் SMS செய்தி மூலம் தகவல் தெரிவிக்கவும் தன்னுடைய மொபைல் போன் எண்ணை TIN எண் பெறும் போது வணிகவரித் துறையில் பதிந்து கொள்ளும் முறையை உடனே அமல்படுத்த வேண்டும். சோதனையின்போது அதிகாரி கூறும் குற்றச்சாட்டை மறுத்து அந்த மொபைல் போன் மூலம் எஸ்.எம்.எஸ் மூலம் செய்தி அனுப்பினால் அதை ஏற்று Show Cause Notice கொடுத்துவிட்டு வாகனத்தை அனுப்பிவிட வேண்டும். கோப்புகளை சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்ப வேண்டும்.

3. பழைய தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டப்படியான நிலுவைகளுக்கு புதிய சமாதானத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்:

01.01.2007-க்கு முன்னர் நடைமுறையில் இருந்த தமிழ்நாடு பொது விற்பனை வரிச் சட்டத்தின்படி நிலுவையில் உள்ள தாவாக்களையும், மேல் முறையீடுகளையும், நீதிமன்ற வழக்குகளையும் முடிவுக்குக் கொண்டு வர புதிய சமாதான திட்டத்தை தேசிய அளவில் சரக்கு மற்றும் சேவை வரி முறை (GST) அமலாக்கப்படும் முன் தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.