லைசன்ஸ் ராஜ் மீண்டும் அறிமுகப்படுத்த நமது சங்கம் எதிர்ப்பு
February 5, 2014
தமிழக அரசின் 2014-15 பட்ஜெட்டிற்கு நமது சங்கத்தின் ஆலோசனைகள்
February 11, 2014

மதுரை-துபாய் நேரடி விமான சேவையைத் தொடர ஸ்பைஸ்ஜெட் உறுதி

dubaiதுபாய் சர்வதேச விமான நிலையத்தின் முதல் முனையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அங்கு விமானப் போக்குவரத்து வருகின்ற மே மாதம் முதல் நாள் முதல் 80 நாட்களுக்கு தினசரி சில மணி நேரங்கள் நிறுத்தப்பட உள்ளதின் காரணமாக மதுரை-துபாய் நேரடி விமான சேவையைத் தற்காலிமாக நிறுத்தி வைக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பரிசீலித்து வருவதை அறிந்து இந்த விமானச்சேவை தற்காலிகமாகக் கூட நிறுத்தப்படுவது தென் தமிழகத்தில் தொழில் வணிக வளர்ச்சியையும் சுற்றுலாவையும் வெகுவாகப் பாதிக்கும் என்றும், இடைவிடாது முயற்சிகளுக்குப் பின்னரே நடு இரவு நேரங்களில் மதுரை-துபாய் மார்க்கதில் இயக்கப்படும் ஸ்பைஸ் ஜெட் விமானங்களுக்காக மதுரை விமான நிலையத்தில் இரவு நேரப்பணிக்கான பாதுகாப்பு, குடியுரிமை மற்றும் சுங்கத்துறைப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர் என்றும் விமானச் சேவை மீண்டும் துவக்கப்படும் போது அவர்களது பணியைத் திரும்பப் பெறுவது மிகக்கடினம் என்றும் எனவே துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெறும் காலத்தில் மாற்று ஏற்பாடாக மதுரை-துபாய் விமானத்தை மதுரையிலிருந்து துபாய் ஜெபெல் அலியில் உள்ள அல் மக்டூம் சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கவோ அல்லது மதுரை-துபாய்க்குப் பதிலாக மதுரை-ஷார்ஜா இடையே விமானச்சேவையைத் தொடரவோ தேவையான முயற்சிகளையும் நடவடிக்கையும் எடுக்கும்படி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் திரு கலாநிதி மாறன் அவர்களை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டது.

சங்கத்தின் கோரிக்கையைத்தொடர்ந்து ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் திரு.கலாநிதி மாறன் அவர்களின் தகவலின் பேரில் புதுடில்லி குர்காவுன் அலுவலகத்தில் உள்ள மேலாண்மை இயக்குநர் திரு.N நடராஜன், தமிழ்நாட்டு தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத்தலைவர் திரு.S.இரத்தினவேல் அவர்களைத் தொடர்பு கொண்டு மதுரை-துபாய் நேரடி விமானச் சேவையைத் தற்காலிகமாகக் கூட நிறுத்தி வைக்காமல் தொடர ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், துபாய் சர்வதேச விமான நிலையத்தில் தினமும் மேம்பாட்டுப் பணிகள் நடைபெறாத நேரங்களில் மதுரை-துபாய் விமானச் சேவையைத்தொடர அனுமதிக்கும்படி துபாய் சர்வதேச விமான நிலைய நிர்வாகத்தை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கேட்டுக்கொண்டிருப்பதாகவும் அக்கோரிக்கை ஏற்று கொள்ளப்படாவிட்டால் அந்த இடைப்பட்ட காலத்தில் மதுரை-துபாய் மார்க்கத்திற்குப்பதிலாக மதுரை-ஹார்ஜா மார்க்கத்தில் விமானத்தை இயக்க தேவையான நடவடிக்கைகளை ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் எடுக்கும் என உறுதி அளித்தார்.

மதுரை-துபாய் நேரடி விமானசேவையைத் தற்காலிகமாகக் கூட நிறுத்தி வைக்காமல் சேவையைத் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்தவாக உறுதி அளித்துள்ள மைக்கா ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நன்றியையும், பாரட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

மேற்கண்ட உரையாடலின்போது மதுரை-சிங்கப்பூர் இடையே நேரடி விமானச்சேவையை ஸ்பைஸ் ஜெட் விரைவில் துவங்க வேண்டுமெனத் தமிழ்நாடு  தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் திரு.S. இரத்தினவேல் வலியுறுத்திய கோரிக்கை முன்னுரிமை கொடுத்து பரிசீலிக்கப்படும் என்று அவர் உறுதியளித்தார்.