வாழ்த்துக்கள் தலைவருக்கு… நன்றிகள் வாசனுக்கு…
February 5, 2014
லைசன்ஸ் ராஜ் மீண்டும் அறிமுகப்படுத்த நமது சங்கம் எதிர்ப்பு
February 5, 2014

மதுரை-ஷார்ஜா இடையே விமான போக்குவரத்தை துவக்க ஸ்பைஸ்ஜெட்க்கு கோரிக்கை

sharjahதுபாய் சர்வதேச விமான நிலையத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் மேம்பாடு பணிகள் காரணமாக       மதுரை- துபாய் நேரடி விமான சேவையை சில மாதங்கள் நிறுத்தி வைக்க ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பரிசீலித்துவருகிறது. மாற்று ஏற்பாடுகள் செய்து சேவையைத் தொடர்ந்து நடத்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் பரிசீலித்து வருகிறது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆறு மாதம் நடைபெறும் 2020 சர்வதேச வர்த்தக கண்காட்சியை நடத்திட பிரேசில், ரஷ்யா, தாய்லாந்து மற்றும் துருக்கி நாடுகளுடன் துபாய் போட்டியிடுகிறது. அதன் காரணமாக துபாய் சர்வதேச விமான நிலையத்தின் ஒன்றாவது முனையத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இவ்வாண்டு மே மாதம் முதல் சில மாதங்கள் அங்கு விமான சேவை நிறுத்தப்பட உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு மதுரை- துபாய் நேரடி விமான சேவையை இவ்வாண்டு மே மாதம் முதல் மேற்கண்ட மேம்பாட்டு பணிகள் நிறைவுபெறும் வரை நிறுத்தி வைக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பரிசீலித்து வருவதாக தெரிகிறது.

தினசரி இருவழிகளிலும் முழுமையான அளவு அல்லது பெரும்பாலான பயணிகளுடன் சென்று கொண்டிருக்கும் இவ்விமான சேவை சிறிது காலத்திற்கு கூட நிறுத்தப்படுவது தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சியையும் சுற்றுலாவையும் வெகுவாக பாதிக்கும். தீவிர முயற்சிகளுக்கு பின்னரே, நடு இரவு நேரங்களில் மதுரை-துபாய் மார்க்கத்தில் இயக்கப்படும் ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்காக மதுரை விமானநிலையத்தில் இரவு நேரப்பணிகளை பாதுகாப்பு, குடியுரிமை மற்றும் சுங்கத்துறைப் பணிகளை மேற்கொள்ளும் அதிகாரிகள், அதிலும் குறைந்த பட்ச அளவிலேயே நியமனம் செய்யப்பட்டனர். அவர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

மதுரை விமான நிலையத்தில் வேறு எந்த விமான சேவையும் நடு இரவில் இல்லை. விமானசேவை தற்போது நிறுத்தப்படுவது சில மாதங்களுக்குத்தான் என்றாலும் தொடர் வலியுறுத்தல் மற்றும் முயற்சிகளுக்கு பின் தென் மாவட்டங்களின் தொழில், சுற்றுலா வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்ட இந்த இரவு நேர வசதிகள் ரத்து செய்ய பெற்று விமான சேவை மீண்டும் துவக்கப்படும்போது மறுபடியும் ஏற்படுத்துவது மிகக்கடினமானது.

எனவே துபாய் சர்வதேச விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் நடைபெறும் காலத்தில் மாற்று ஏற்பாடாக மதுரை- துபாய் விமானத்தை மதுரையிலிருந்து துபாய் ஜெபெல் அலியில் உள்ள அல் மக்டூம் சர்வதேச விமான நிலையத்திற்கு இயக்கவோ அல்லது மதுரை-துபாய்க்கு பதிலாக மதுரை-ஷார்ஜா இடையே இயக்கவோ தேவையான முயற்சிகளையும் நடவடிக்கைகளையும் எடுக்கும்படி ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் தலைவர் திரு.கலாநிதி மாறன் அவர்களையும் உயர்அதிகாரிகளையும் நம் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

அத்துடன் மதுரை-சிங்கப்பூர் மற்றும் மதுரை-கோலாலம்பூர் மார்க்கங்களிலும் ஸ்பைஸ்ஜெட் நேரடி சேவையை விரைவில் துவங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கும்படியும் நம் சங்கம் வலியுறுத்தியுள்ளது.