மதுரை-துபை நேரடி விமான சேவை ஆரம்பம் !
November 23, 2013
வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.ஆனந்த் சர்மாவிற்கு பாராட்டு
December 12, 2013

மதுரை விமான நிலையத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையம் திறப்பு

maduraiairportமதுரை விமான நிலையத்தில், மல்லிகைப் பூ விற்பனை நிலையத்தை, மத்திய தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

மதுரை விமான நிலையத்தின் டெர்மினல் கட்டடத்தில், மதுரைக்கு பெருமை சேர்க்கும் மல்லிகைப் பூ விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதைத் திறந்துவைத்து, செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்தது: மதுரையில் மீனாட்சி அம்மனுக்கு அடுத்தபடியாக பிரசித்திபெற்றது மல்லிகைப் பூ. இதனை, வெளிநாட்டினர் வாங்கும்வண்ணம் விற்பனை நிலையத்தை விமான நிலையத்தில் அமைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது.

காலையில், சிவகாசியில் உள்ள பட்டாசு தயாரிப்பாளர்களிடம் பட்டாசை உலக சந்தைக்கு கொண்டு செல்லவேண்டும் என்றேன்.

அதேபோல், மதுரை மல்லிகைப் பூ வையும், பழ வகைகளையும் உலக சந்தைக்கு கொண்டு செல்ல தொழில் வர்த்தக சங்கத்தினர் முயற்சிக்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில், தொழில் வர்த்தக சங்கத்தின் முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, தலைவர் ஜெகதீசன், வர்த்தக சங்கத்தினர் எஸ். நாகரத்தினம்,  ராஜேந்திரன், கார்த்திகேயன், விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரி சங்கையாபாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

விமான நிலையத்தில் 2 மீட்டர் மல்லிகைப் பூ ரூ. 100 என தற்போது விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்த விற்பனையாளர்கள் தகவல் தெரிவித்தனர்.