வணிகவரி படிவம் ‘WW’ சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு- அமைச்சருக்கு நன்றி
November 2, 2013
மதுரை விமான நிலையத்தில் மல்லிகைப் பூ விற்பனை நிலையம் திறப்பு
November 23, 2013

மதுரை-துபை நேரடி விமான சேவை ஆரம்பம் !

dubai01மதுரை-துபை நேரடி விமான சேவை வெள்ளிக்கிழமை முதல் துவங்கியது.

மதுரையில் இருந்து துபைக்கு நேரடி விமான சேவை துவக்குவதற்கு, தமிழ்நாடு தொழில் வர்த்தக சஙகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் தீவிர முயற்சி மேற்கொண்டன. இதன் பயனாக, மதுரையில் இருந்து துபைக்கு முதல் விமான சேவை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணிக்கு இந்த விமானம்  புறப்பட்டுச் சென்றது. இதில், தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ். ரத்தினவேலு, சங்கத் தலைவர் என். ஜெகதீசன் உள்ளிட்ட 36 பேர் அடங்கிய குழுவினர் பயணம் செய்தனர்.

இந்தக் குழு, கெய்ரோவில் சுற்றுலா வளர்ச்சி குறித்து ஆலோசனை நடத்த உள்ளது. பின்னர், எகிப்து உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பின் 29 ஆம் தேதி மீண்டும் மதுரை திரும்ப உள்ளது.