வணிகவரித்துறை அமைச்சர் திரு B.V. ரமணா அவர்களுடன் சந்திப்பு
October 25, 2013
மதுரை-துபை நேரடி விமான சேவை ஆரம்பம் !
November 23, 2013

வணிகவரி படிவம் ‘WW’ சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு- அமைச்சருக்கு நன்றி

BV Ramanaமதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் படி, ஆண்டு விற்பனைத் தொகை ரூபாய் 1 கோடிக்கு மேல் உள்ள தொழில் வணிகம் செய்வோர்‘WW’ என்ற படிவம் ஒவ்வொரு ஆண்டும் பட்டையத் தணிக்கையாளரிடம் சான்றிதழ் பெற்று அக்டோபர் மாதம் இறுதிக்குள் சமர்பிக்க வேண்டும். இது தேவையற்ற நடைமுறை என்றும் பட்டைய தணிக்கையாளரிடம் இதற்கென கூடுதலாக பீஸ் செலுத்தி சான்றிதழ் பெற வேண்டியுள்ளதென்றும் எனவே இப்படிவத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது ரூ.10 கோடிக்கு மேல் ஆண்டு விற்பனைத் தொகை உள்ள தயாரிப்பாளர்கள் மட்டும் சமர்பித்தால் போதும் என சட்டத்திருத்தம் செய்ய வேண்டுமென தமிழக வணிக வரித்துறை அமைச்சர் திரு B.V. ரமணா அவர்களையும் உயர் அதிகாரிகளையும் சென்னையில் சந்தித்து நமது சங்கத்தின் சார்பாக வலியுறுத்தினோம்.

அதன் பயனாக இந்த படிவம் சமர்பிக்க வேண்டிய காலக்கெடுவை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31ம் தேதிக்குள் சமர்பித்தால் போதுமானது என ஆணையிட்டுள்ள வணிக வரித்துறை அமைச்சருக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.

வர்த்தக சங்கப்பிரதிநிதிகளை இரண்டு மாத காலத்திற்குள் அழைத்து வர்த்தக சங்கத்தின் மேற்கண்ட ஆலோசனைகளை பரிசீலித்து உரிய முடிவுகள் எடுக்க வேண்டும் என மாண்புமிகு அமைச்சரை கேட்டுக்கொள்கிறோம்.