வணிக வரித்துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள்
October 23, 2013
வணிகவரி படிவம் ‘WW’ சமர்பிக்க காலக்கெடு நீட்டிப்பு- அமைச்சருக்கு நன்றி
November 2, 2013

வணிகவரித்துறை அமைச்சர் திரு B.V. ரமணா அவர்களுடன் சந்திப்பு

IMG_6683வணிகவரித் துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள் குறித்தும், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் இல்லாமல் வணிகம் சிறப்பாக நடைபெறுவதற்கான நடைமுறைகள், அறிமுகம் குறித்தும் சென்னையில் வணிகவரித் துறை அமைச்சர் திரு B.V ரமணா அவர்களுடன் ஆலோசனை நடத்தினர் நமது சங்கத்தினர்.

மதுரை வணிகவரித் துறை இணை ஆணையரின் அதிகார வரம்பிற்குட்பட்ட ஐந்து மாவட்டங்கள் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வணிகவரி அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள் குறித்து தெரிவிக்கவும், எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளை அதிகாரிகள் செய்ய முடியாத வகையில் லஞ்ச லாவண்ய ஊற்றுக்கண்களை அடைக்க வணிகவரிச் சட்ட அமலாக்கத்தில் செய்ய வேண்டிய நடைமுறை மாறுதல்கள் குறித்து நம் வர்த்தக சங்கத்தின் ஆலோசனைகள் குறித்தும் வணிகவரித் துறை அமைச்சர் திரு. ரமணா அவர்களையும், வணிகவரி ஆணையர் திரு. K. மணிவாசன் அவர்களையும் வர்த்தக சங்கத்தின் முதுநிலை தலைவர் திரு S.இரத்தினவேல், தலைவர் திரு N. ஜெகதீசன் ஆகியோர் நேற்று (24.10.2013) மாலை சென்னையில் சந்தித்து விரிவாக விவாதித்தனர். விவாதத்தின் போது மதுரை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு R. அண்ணாத்துரை அவர்களும் உடனிருந்தார்.

1) வணிகவரித் துறை அமலாக்கப் பிரிவு (Enforcement) அதிகாரிகள் நிறுவனங்களில் ஆய்வு (Raid) செய்யும்பொழுதும், சாலைகளில் சரக்கு வாகன சோதனைகளில் ஈடுபடும் பொழுதும் சரக்கின் உரிமையாளர் அதிகாரியின் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளிக்கும் நோட்டீஸ் (Show case Notice) தருமாறு கேட்டால், அவ்வாறு அளித்து கோப்புகளை மேல் நடவடிக்கைக்காக அந்த வணிகரின் சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிக்கு அனுப்ப வேண்டும். அந்த இடத்திலேயே அட்வான்ஸ் வரி, அபராதம் அல்லது காம்பவுண்டிங் ஃபீஸ் வசூலிக்க அனுமதிக்கக் கூடாது.

2) அவ்வாறான ஆய்வு மற்றும் சோதனையின்போது அதிகாரிகள் மற்றும் வணிகர்கள் “எவ்வாறு
நடந்துகொள்ள வேண்டும், எவ்வாறு நடந்துகொள்ளக் கூடாது” (Do’s and Dont’s) என்ற அறிவுரைகளை வெளியிட வேண்டும்.

3) தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி, வணிகர் எங்கிருந்தாலும் வணிகவரி
அதிகாரியுடன் தொடர்பு கொண்டு மொபைல் போனில் பேசவும், SMS மூலம் தகவல் தெரிவிக்கவும் தன்னுடைய மொபைல் போன் எண்ணை வணிகவரித் துறையில் பதிந்து கொள்ளும் முறையை உடனே அமல்படுத்த வேண்டும்.

4) வணிகர்கள் தங்களுடைய பிரச்னைகளை அமைச்சர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்குக்
கொண்டு வந்து உடனுடக்குடன் தீர்வு காண வணிகர் நல வாரியம் (Trader Welfare Board), மதிப்புக் கூட்டு வரி அமலாக்கக் கண்காணிப்புக் குழு (VAT Implementation Monitoring Commitee) ஆகிய உயர் அதிகார அமைப்புகளை உடனே மீண்டும் அமைக்க வேண்டும்.

5) குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரிகளின் மீது உரிய விசாரணை நடத்தி மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6) “WW” என்ற ஆண்டு படிவத்தை வணிகவரித் துறைக்கு பட்டயத் தணிக்கையாளரிடம் (Chartered Accountant) சான்றிதழ் பெற்று அனுப்புவதில் பல சிரமங்களும், வீண் செலவும் ஏற்படுகிறது. எனவே இப்படிவத்தை ரத்து செடீநுய வேண்டும் அல்லது அமலாக்கத்தை ஒத்திவைத்து வரிக்குட்பட்ட தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே ஆன்லைனில் இப்படிவத்தை சமர்ப்பிக்கும் முறை குறித்து விவாதிக்க வேண்டும்.

இந்த ஆலோசனைகள் குறித்து முழு விபரங்களையும் கேட்டுக் கொண்ட வணிவரித் துறை அமைச்சர் அவற்றைப் பரிசீலித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.