ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் பயிற்சி வகுப்பு
May 17, 2013
சூரிய சக்தி பம்ப் செட்டுகளை மானியத்துடன் வழங்கும் திட்டம்
May 17, 2013

யாழ்பாண தொழில் வர்த்தக பயணம் – 2013

Jaffnaயாழ்ப்பாணத்தில் ஜனவரி 18 முதல் 20 ஆம் தேதி வரை வர்த்தக கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தினர் பங்கு பெற்றனர். சர்வதேச வர்த்தக கண்காட்சியானது நான்காவது தடவையாக நடைபெற்றது.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் துணைத்தூதுவர் மாகாலிங்கம், மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கண்காட்சியினை ஆரம்பித்து வைத்தனர்.

கண்காட்சியினை ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதம விருந்தினர்களை வரவேற்கும் நிகழ்வு யாழ். பொதுநூலகத்தில் நடைபெற்றது. அதனையடுத்து விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு மைதானத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு மொத்தமாக 365 காட்சிக்கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.அவற்றில் இந்தியாவின் 87 காட்சிக் கூடங்கள் இந்தியாவினுடையதாகும். அதிலும் 49 காட்சிக் கூடங்கள் இலங்கையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அங்கு வீட்டுத் தேவைக்கான பொருட்கள், மருத்துவ கூடங்கள் கல்விக் கூடங்கள், இயந்திரதொழில் நுட்பங்கள், கைத்தொழில் அபிவிருத்திக் கூடங்கள் என பல்வேறு வகையான காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அப்போது தமிழக தொழில் வர்த்தக சங்கத்தின் ஏற்றுமதி மேம்பாட்டு பிரிவின் துணைத்தலைவர் ஜே.கே. முத்து கூறுகையில்,
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் வர்த்தக தொழிற்சாலைகளை ஆரம்பித்து அங்கு கடந்த காலங்களில் பாதிக்காப்பட்ட மக்களுக்கு தொழில்வாய்ப்புகளை பெற்றுக்கொடுப்பதற்கு தமிழக வர்த்தகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.அத்துடன் யாழ்ப்பாணத்தில் தொழிற்சாலைகளை ஆரம்பிக்க விரும்பும் முயற்சியாளர்களுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கவும் தயாராக இருக்கின்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.