மத்திய அரசை கண்டித்து தொழில் வர்த்தக சங்கம் 26ம் தேதி தர்ணா
April 24, 2013
இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் வழங்க தொழில் வர்த்தக சங்கம் கோரிக்கை
May 13, 2013

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு நமது கோரிக்கைகள்

TEBதமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் சார்பில் இன்று(10.05.2013) வர்த்தக சங்க பவளவிழா ஹட்சன் பேரவை அரங்கில் நடைபெற்ற மின் கட்டண நிர்ணய பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நமது சங்கத்தின் சார்பில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள் கீழ்கண்டவாறு,

தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் திருத்தி அமைக்கப்பட்ட ஆணையின்படி தாழ்வழுத்த மின் இணைப்பிற்கு மாதம் ஒன்றிற்கு ரூ.30 என விதிக்கப்பட்டு வந்த நிரந்தரக் கட்டணம் (Fixed Charges) தற்போது மின் இணைப்பின் அடிப்படையில் நிரந்தரக் கட்டணம் கணக்கிடப்படாமல் மின் இணைப்பிற்கு பெற்றுள்ள கிலோவாட்டின் அடிப்படையில் கணக்கிடப்படுவதால் கட்டணம் சுமார் 100 மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டு செலுத்தும் சூழ்நிலை உள்ளது.

இவ்வாறு நிரந்தக்கட்டணம் மிக அதிகமான அளவில் உயர்த்தப்பட்டு மறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதால் மின் கட்டணம் மற்றும் உற்பத்திச் செலவு உயர்வு, வட்டி விகித அதிகரிப்பு மற்றும் மின்சார பற்றாக்குறை போன்ற பல்வேறு காரணங்களால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் சிரமங்களை மேலம் தீவிரப்படுத்தியுள்ளது. பெரும்பாலான சிறு தொழில்கள் உற்பத்தியை முற்றிலும் நிறுத்த வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள சிறு தொழில்களுக்கும் வணிக உபயோக மின் இணைப்பு பெற்றுள்ள நிறுவனங்களுக்கும்  ஏற்பட்டுள்ள இக்கடுமையான பாதிப்பினை கருத்தில் கொண்டு மின்சார உபயோகத்திற்கான நிரந்தரக் கட்டணத்தை  மீண்டும் மாதம் ஒன்றிற்கு ரூ.30 என மாற்றி அமைக்க வேண்டும் அல்லது மின்சாரம் முழுமையாக வழங்கப்படும் வரை மிக அபரிதமாக உயர்த்தப்பட்டுள்ள நிரந்தரக்கட்டணம்(Fixed Charges) ரத்து செய்யப்பட வேண்டும்.

பிற கோரிக்கைகள்

  • கிடைக்கும் மின்சாரத்தை தமிழகம் முழுவதும் எவ்வித பாகுபாடுமின்றி சமமாக பகிர்ந்தளிக்க வுண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணையம் வழிகாட்டியும் கூட இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
  • தற்போது சென்னையில் 2 மணி நேர மின்வெட்டும் பிற மாவட்டங்களில் 16 மணி நேர மின்தடை உள்ளதை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
  • மின் விநியோகத்தை சீரமைத்து, சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் தினசரி ஒரு ஷிப்டாவது நடத்தக் கூடிய வகையில் குறைந்த பட்சம் பகலில் 8 மணி நேரம் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.
  • பொதுமக்கள் மாணவ மாணவியர்கள் குறிப்பாக மகளிர் பெருமக்கள், சிறு குழந்தைகள் மற்றும் வயோதிகர்கள் நலனை கருத்தில் கொண்டு இரவு நேரங்களில் மின் விநியோகத்தை தடையின்றி வழங்க வேண்டும்.