மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லிக்கு நமது சங்கம் பாராட்டுக்கள்
June 3, 2014
இயற்கை வளங்களை பாதுகாக்கும் யு.எஸ்! BISCOVER AMERICA சிறப்பு கட்டுரை
June 27, 2014

YES மைய உறுப்பினர்களின் அமெரிக்கத் தூதுக்குழு பயணம்

newyorkதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் செயலாற்றும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேஷன் கீழ் இயங்கும் இளம் தொழில் முனைவோர் பயிற்சி மையம் (YES) மதுரை, திண்டுக்கல்,சிவகாசி, சென்னை, இராமநாதபுரம் மற்றும் கரூர் ஆகிய நகரங்களில் தனது கிளைகளை(Chapter) அமைத்து வெகு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இளம் தொழில் முனைவோர் பயிற்சி மைய உறுப்பினர்கள் காலத்திற்கேற்ற புதிய யுக்திகள், தொழில்நுட்பங்களை தங்களது தொழில் வணிகத்தில் புகுத்தி, ஆண்டுதோறும் 30 சதவிகித உயர்வினைக் கொண்டு வரவேண்டும் என்ற இலக்குடன் செயல்பட்டு வருகின்றனர். மேலும் YES மைய உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் ஓர் குழு உணர்வுடன் தங்களது தொழில் வணிகம் மட்டுமல்லாது நாட்டின் தொழில் வணிகமும் வளர்ச்சி கண்டு, சமுதாய வளர்ச்சியும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

YES மைய உறுப்பினர்களின் அமெரிக்கத் தூதுக்குழு பயணம்

தென் தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே இருவழி வர்த்தகம்(Bi-lateral trade) அதிகரிக்கச் செய்திடும் வகையில், சென்னை அமெரிக்க தூதரக வர்த்தக சேவைப் பிரிவின் (US Commercial Service) ஒத்துழைப்புடன் இளம் தொழில் முனைவோர் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 100 உறுப்பினர்கள் அடங்கிய வர்த்தகத் தூதுக்குழு ஜுன் 07-ம் நாள் சென்னையிலிருந்து புறப்பட்டு நியூயார்க், வாஷிங்டன், நயாகரா, லாஸ் வேகாஸ், லாஸ் ஏஞ்சல்ஸ், ஆர்லாண்டோ & மியாமி மற்றும் சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களைப் பார்வையிட்டு 25.06.2014-ம் நாள் மதுரை திரும்ப உள்ளனர். இத்தூதுக்குழுவிற்கு BIZCOVER AMERICA எனப் பெயரிடப்பட்டுள்ளது.

தூதுக்குழுவின் முக்கிய நோக்கங்கள்

அமெரிக்கத் தொழில் அதிபர்களுடன் சந்திப்பு, இந்திய வம்சாவழி தொழிலதிபர்களுடன் கலந்துரையாடல், பிரபல தொழிற்சாலைகளை பார்வையிடுதல், லாஸ் வேகாசில் நடைபெறவிருக்கும் Infocomm 2014 Exhibition-ல் பங்கேற்று தமிழகத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே நடைபெறும் இருவழி வர்த்தகத்தின் மதிப்பு மேலும் அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளவிருப்பதும் இப்பயணத்தின் முக்கிய நோக்கங்களாகும்.