இந்திய-அமெரிக்க பொருளாதார வளர்ச்சியில் பெண் தொழில் முனைவோர் முக்கியப் பங்கு! ஜெனிஃபர்
March 9, 2014
YES மைய உறுப்பினர்களின் அமெரிக்கத் தூதுக்குழு பயணம்
June 5, 2014

மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லிக்கு நமது சங்கம் பாராட்டுக்கள்

arunjatleeசரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கத்தை துரிதப்படுத்த மத்திய நிதி அமைச்சர் திரு. அருண்ஜெட்லி தேவையான நடவடிக்கை எடுத்துள்ளதற்கு நமது சங்கம் வரவேற்பினையும் பாராட்டுக்களையும்
தெரிவித்துக்கொள்கிறது.

தற்போது அமலில் உள்ள உற்பத்திக்கான கலால் வரி ( Central Excise), சேவை வரி(Service Tax), மத்திய விற்பனை வரி(Central Sales Tax) மற்றும் மாநில மதிப்புக்கூட்டு வரி(Value Added Tax- VAT) ஆகிய மத்திய மற்றும் மாநில மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு அமலாக்கப்படும் முற்போக்கான வரி முறைதான் சரக்கு மற்றும் சேவை வரி(Goods and Service Tax-GST). கலால் வரி, சேவை வரி,மத்திய விற்பனை வரி மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஆகிய அனைத்து வரிகளையும் சேர்த்து சராசரியாக தற்போது ஒரு பொருளின் மீது 30 சதவீத வரி விதிக்கப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரி முறையில் மொத்த வரி இதைவிட கணிசமாக குறையும்.

தற்போது கலால் வரியையும் சில குறிப்பிட்ட சேவைகளுக்கான வரியையும் மத்திய விற்பனை வரியையும் வணிகர்கள் செட் அப் (Set off) செய்து கொள்ள முடியாமல் தங்கள் அடக்க விலையில்தான் சேர்த்துக்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் மதிப்புக் கூட்டு வரி முறையில் முழு வரித் தொகையையும் வணிகர்கள் செட் ஆப் செய்துகொள்ள முடியும். அதனால் வரிச்சுமை குறைந்து சரக்குகளின் விலை குறையும். வரி ஏய்ப்பு தவிர்க்கப்பட்டு நேர்மையான வணிகர்கள் மேலும் சிறப்பான முறையில் வணிகம் செய்திட இயலும். பொதுமக்களும் பயன்பெறுவர்.
மிக எளிமையான இந்த வரி முறை உலகம் முழுவதும் பல நாடுகளில் வெற்றிகரமாக அமலாக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் அந்த நாடுகளில் சுற்றுலாப் வாங்கியப் பொருட்களுக்கான சரக்கு மற்றும் சேவை வரியை தங்கள் நாட்டுக்குத் திரும்பும்போது அவர்களுக்கு திரும்ப கொடுக்கப்படுகிறது. எனவே சரக்கு மற்றும் சேவை வரியை விரைவில் அமலாக்க வேண்டும் என நமது சங்கம் ஆரம்பம் முதலே தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரி அமலாக்கப்படாமல் நம் நாட்டில் வரிச் சீர்திருத்தங்கள் முழுமையாகாது. பொருளாதார வளர்ச்சியை அதிகரித்திட இயலாது. எனவே, தொழில் வணிக வளர்ச்சிக்கும் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் நல்ல உத்வேகம் அளித்திடக் கூடிய சரக்கு மற்றும் சேவை வரியை மேலும் காலதாமதப்படுத்தாமல் விரைவில் அமலாக்கிட மத்திய நிதி அமைச்சர் திரு.அருண் ஜெட்லி நடவடிக்கை எடுத்துள்ளது வெகுவாக பாராட்டத்தக்கது.