Last Speech of Dr. A.P.J. Abdul Kalam in Tamilnadu
August 17, 2015
விரைவில் இலங்கை செல்கிறார்கள் WE உறுப்பினர்கள்
November 19, 2015

GST குறித்து அரசுக்கு ஆலோசனை வழங்க கலந்துரையாடல் கூட்டம்

gstஉலகம் முழுவதும் சுமார் 140 நாடுகளில் அமலாக்கப்பட்டிருப்பது போல் நாடு முழுவதும் வரி விகிதங்களில் மாநிலத்திற்கு மாநிலம் வித்தியாசம் இல்லாமல் இந்தியாவில் எங்கு சரக்குகளை வாங்கினாலும் சேவைகளை பெற்றாலும் செலுத்திய வரியை Set off எடுத்துக்கொள்ளும் வசதியுடன் அமலாக்கப்படவிருக்கும் GST (Goods & Services Tax) வரிச்சட்ட வரைவு விதிகளை நன்கு புரிந்துகொண்டு அரசுக்கு நமது கருத்துக்களையும் கோரிக்கைகளையும் வைக்க கலந்துரையாடல் கூட்டம், வருகிற 24.11.2015, செவ்வாய்கிழமை மாலை 5.00 மணிக்கு வர்த்தக சங்கம் பவள விழா ஹட்சன் பேரவை அரங்கத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா முழுவதையும் ஒரே சந்தையாக்க விரைவில் அமலாக்கப்படவிருக்கும் ஒரே மறைமுக(Indirect Tax) வரியான (Goods and Services Tax) புதிய வரிச்சட்டத்தில் சரக்கு மற்றும் சேவை வரி)

  1. பதிவு செய்தல் (Registration)
  2. வரி செலுத்துதல் (Payments)
  3. வரியை திரும்பப் பெறுதல் (Refunds)
  4. படிவங்கள் சமர்பித்தல் (Returns)

ஆகிய வணிக நடைமுறைகளுக்கான அறிக்கைகள் (GST Business Processes Reports) மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய்த்துறை இலாகா வெளியிட்டு தமிழக வணிக வரித்துறையின் ஒத்துழைப்போடு முழுநாள் பயிற்சியரங்கம் (Workshop) ஒன்றை சென்னையில் 29-10-2015 -ம் நாள் நடத்தியது.

இந்த சட்ட நடைமுறைகள் குறித்து நமது தொழில் வணிகத் துறையினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த கலந்துரையாடல் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

நம் நாட்டின் தொழில் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க GST வரியை 01.04.2016 முதல் அல்லது அதற்குப்பின் எந்த நாளிலிருந்து அமலாக்க மத்திய அரசு விரைவாக நடவடிக்கைகள் எடுத்து வருவது தாங்கள் அறிந்ததே ! வரியை முறையாக செலுத்தி நேர்மையாக வணிகம் செய்யும் தொழில் வணிகத்துறையினருக்கு ஓர் வரப்பிரசாதமான முற்போக்கு வரி முறையான GST வரி குறித்த விபரங்களை தெரிந்து வணிகம் செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

இன்று அனைவராலும் பாராட்டப்படும் மதிப்புக் கூட்டு வரி (VAT) அமலாக்கத்திற்கு முன் அவ்வரியை வரவேற்றதுடன் பல்வேறு கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் ஆகியவற்றை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் நடத்தி வணிகர்களின் கருத்துக்களை அரசுக்கு எடுத்துக் கூறியதால் தான் அனைவரும் வரவேற்கக் கூடிய வகையில் தமிழகத்தின் VAT வரி 2007ம் ஆண்டு அமலாக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும்.

மாநில அளவிலான VAT வரியின் அனைந்திந்திய அளவிலான முழுமையான வடிவம் GST வரியாகும். தற்போதைய மத்திய வரிகளான கலால் வரி(Excise Duty) ,சேவை வரி(Service Tax),மத்திய விற்பனை வரி(Central Sales Tax), மற்றும் மாநில வரிகளான மதிப்பு கூட்டு வரி(VAT), ஆடம்பர வரி(Luxury Tax), கேளிக்கை வரி(Entertainment Tax), ஆக்ட்ராய்டு(State implemented Octroi), லாட்டரி மீதான வரி(Lottery Tax), நுழைவு வரி(Entry Tax), போன்ற பல்வேறு மறைமுக வரிகளை ரத்து செய்துவிட்டு ஒரே வரியாக அமலாக்கப்படவிருப்பதுதான் GST வரியாகும்.