YES மைய உறுப்பினர்களின் அமெரிக்கத் தூதுக்குழு பயணம்
June 5, 2014
இந்திய ரயில்வே பட்ஜெட் ஆற்றல் மிகுந்தது! நமது சங்கம் கருத்து
July 8, 2014

இயற்கை வளங்களை பாதுகாக்கும் யு.எஸ்! BISCOVER AMERICA சிறப்பு கட்டுரை

கிட்டத்தட்ட 1 வருடத்திற்கு முன்பு கனவு காணப்பட்டு YES அமைப்பின் இளம் தொழில் முனைவோர் மையத்தின் 4வது வர்த்தகச் சுற்றுலாவிற்கு10442539_786095424764151_8428912182460022319_nஅமெரிக்கா செல்வதாக 9 மாதங்களுக்கு முன்பாகவே முடிவெடுக்கப்பட்டு தலைவர் V.நீதிமோகன் அவர்களால் குழு உருவாக்கப்பட்டு படபட விறுவிறுவென வேலைகள் நடந்தன.

இந்த பயணத்திற்கு பெயர் வைத்தது முதல் சர்வதேச அரங்கில் பல்வேறு காரணிகளை நிர்ணயிக்கும் வல்லரசான அமெரிக்காவிற்கு சென்று அதன் தொழில் வர்த்தகக் கலாச்சாரம், வாய்ப்புகள் போன்றவற்றை அறிந்துவரும் பொருட்டு எப்பொழுது செல்வது, எங்கெங்கு செல்வது, எத்தனை நாட்கள், எவ்வாறு போன்ற திட்டங்கள் தீட்டப்பட்டு அடுத்தடுத்த நடவடிக்கைகளில் குழு ஈடுபட்டது. குழுவின் தலைவராக மையத்தலைவர் திரு.V.நீதிமோகனே பொறுப்பேற்று ஒருங்கிணைப்பாளராக அமெரிக்க வர்த்தக பயணத்தின் அவசரத்தையும் அவசியத்தையும் முதலில் முன்மொழிந்த திரு.PARKWOOD கண்ணனையும் பிற ஒருங்கிணைப்பாளர்களாக திரு.ராஜேஷ் மற்றும் திரு.ராஜன் ஆகியோர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

7-June-2014 அன்று காலை, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க வளாகத்திலிருந்து தமிழ்நாடு சேம்பர் ஃபவுண்டஷன் தலைவர் திரு.S.இரத்தினவேல், தலைவர் N.ஜெகதீசன் மற்றும் சேம்பர் செயற்குழு உறுப்பினர்களால் வழி அனுப்பி வைக்கப்பட்ட பயணக்குழு மாலை 5 மணிக்கு சென்னை விமானநிலையத்தில் புறப்பட்டது.

துபாய் வழியாக 8 ஆம் தேதி அமெரிக்கா சென்றடைந்த குழு, அன்று இரவு பயணத்திட்டம் மற்றும் சிறப்பம்சங்கள் தொடர்பான கலந்துரையாடல் மற்றும் தகவல்களுடன் கலைந்தது. நியூயார்க், வாஷிங்டன்,ஃபபலோ, ஒரிலேண்டா, மயாமி, லாஸ்வேகாஸ், லாஸ் ஏஞ்சலிஸ், சான் பிரான்சிஸ்கோ போன்ற பகுதிகள் பயணிக்கப்பட்டன.

10403139_779433272097033_7822016805404024067_nநியூயார்க்கில் இந்திய வம்சாவழி தொழிலதிபர்களுடனும் மற்றும் வாஷிங்டனில் அமெரிக்க வர்த்தக அமைப்புடன் கலந்துரையாடல் நடைபெற்றது. நாசா ஆராய்ச்சிக்கூடம், ZAPPOS நிறுவனம், அமெரிக்க செனட் சபை, INFOCOMM என்ற தகவல் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சி , தொழில்நுட்ப புரட்சி மற்றும் பொழுதுபோக்குத்துறையில் வளர்ச்சியை அறிந்துகொள்ளும் வகையில் யுனிவர்சல் ஸ்டூடியோ (HOLLYWOOD) போன்றவற்றை இக்குழுவினர் சென்று பார்வையிட்டனர்.

ஒவ்வொரு அமெரிக்க நகரத்தின் சிறப்புகளும் வியாபார நிறுவனங்கள் கட்டமைப்புகளையும் கலாசாரங்களையும் நமது உறுப்பினர்களுக்கு மையத்தலைவர் திரு.V.நீதிமோகன் அவர்கள் எடுத்துரைத்தார்.

அமெரிக்கா, உலகத்தின் வல்லரசாக திகழ்வதன் முக்கிய காரணம், அமெரிக்க தொழில் நிறுவனங்களின் வெற்றியே ஆகும். Fortune zoo நிறுவனத்தில் உள்ள 80 சதவீத நிறுவனங்கள் அமெரிக்க நிறுவனங்கள் ஆகும். தொலைநோக்கு திட்டங்கள், கட்டமைப்புகள், புதுமையை வரவேற்கும் சூழல், தனிமனித சுதந்திரம் ஆகியவை நாம் வியாபார பாடங்களாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்கு வெற்றிக்காண வாய்ப்பை (wow Factor) அளிக்க முயலவேண்டும். முக்கிமாக மாறிவரும் வியாபார சூழலில் மாற்றத்தை விரும்பி ஏற்றுக்கொள்ளும் நிறுவனமாக உங்கள் நிறுவனத்தை உருவாக்க வேண்டும். புதிய மாற்றத்தால் சில தோல்விகைள நல்ல அனுபவமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறிய வெற்றிகளையும் நமது தொழிலாளர்களுடன் கொண்டாடி, நிறுவனத்தின் தொலைநோக்கு இலக்கு மற்றும் தொழிலாளர்களின் வேலை சார்ந்த வளர்ச்சியினை வசதிகளை கூறி அவர்களை நிறுவனத்தில் தக்க வைத்து வெற்றி பெற நிறுவனத்தில் தக்க வைத்து வெற்றி பெற வேண்டும் என்றார்.

மேலும் இப்பயணத்தில் அமெரிக்க தலைநகரமான வாஷிங்டனில் UNITED STATES INDIA BUSINESS COUNCIL -USIBC என்ற அமெரிக்க அரசின் தொழில் மேம்பாட்டு மையத்தில் ஜுன் 12ம் தேதி A GLOBAL BUSINESS PRESPECTIVE ON THE INDIA OPPORTUNITY என்ற கூட்டம் சேர்மன் திரு. நீதிமோகன், அமெரிக்க அரசு அதிகாரிகளான திரு.மைக்கேல் கிரின், திரு.பிரிண்டன் பனர் ஆகியோர்களின் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அமெரிக்க தொழில் துறை அதிகாரி, எனது பல ஆண்டு அனுபவத்தில் இந்தியாவின் ஒரு மாநிலத்தில் இருந்து மட்டுமே 100 தொழில் நிறுவனத்தலைவர்கள் ஒன்றாக அமெரிக்க பயணம் மேற்கொண்டதாக உறுப்பினர்களை புகழ்ந்து கூறினார். மேலும் USIBCயின் செயல்பாடு என்பது அரசு – தொழில் நிறுவனங்கள் கூட்டு முயற்சியே ஆகும். Haster Card நிறுவனத்தின் தலைவர் திரு. அஜய் பாங்கா தற்போது இதன் president ஆக உள்ளார். USIBCயின் 39 ஆண்டுகளில் 60 பில்லியன் டாலர்கள் வர்த்தகம் இந்தியா- அமெரிக்க நாடுகளில் நடைபெற்றுள்ளது. தற்போது இந்த வர்த்தகத்தின் இலக்கு 500 பில்லியன் டாலர் என்றார்.

இதன் தொடர்ச்சியாக சான் பிரான்சிஸ்கோவில் மேலும் இரு இந்திய வம்சாவெளி தொழிலதிபர்களுடன் நேர்காணல் என இப்பயணநோக்கம் சிறப்பாக நிறைவேறியது.

இப்பயணம் பற்றி RAJ EXIM நிர்வாக இயக்குனரும் YES அமைப்பின் உறுப்பினருமான திரு.K.திருப்பதி ராஜன் நம்மிடம் பேசியதாவது, வெளிநாட்டில் நடக்கும் தொழில்களை பார்க்கும் போது தொலைநோக்கு பார்வை கிடைக்கும் என்பதால் இளம் தொழில் முனைவோர் மையத்தின் மூலம் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். இதற்கு முன்பு, சீனா, இந்தோனேஷியா, இலங்கை என மூன்று நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறோம்.

தொழில் வணிகத்தை அவர்களின் வியாபாரத்தை சர்வதேச தரத்தில் எடுத்துச்செல்லக்கூடிய ஒரு வாய்ப்பு எங்கள் உறுப்பினர்களுக்கு கிடைக்கும்.

10437687_784881208218906_4950690462572867247_nஇதன்படி மேற்கொள்ளப்பட்ட இந்த BIZCOVER AMERICA சுற்றுலாவில் அமெரிக்காவில் INFOCOMM என்ற தகவல் தொழில்நுட்ப வர்த்தக கண்காட்சிக்கு சென்றோம். அங்கு அலுவலகங்களில் பயன்படுத்தக்கூடிய லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் கூடிய அறிவிப்பு பலகையை பார்த்ததாகவும் அதன் சிறப்பம்சங்கள் பற்றியும் நம்மிடம் பேசினார்.

மேலும் உணவுப்பொருட்கள், நறுமணப்பொருட்கள், ரெடிமேட் போன்ற பொருட்கள் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகின்றன என்றும் திருப்பதி ராஜன் தெரிவித்தார்.

இப்பயணம் குறித்து ARASAN ALUMINIUM INDUSTRIES நிறுவனத்தின் உரிமையாளரும் YES அமைப்பின் உறுப்பினருமான V.கிரிதரன் நம்மிடம் பேசியதாவது, இந்தியாவை விட அமெரிக்காவில் அடிப்படை வசதிகள் உட்பட எல்லாவிதத்திலும் வளர்ச்சி அதிகமாகவே காணப்படுகிறது.

அந்நாடு எல்லா தொழில்துறைக்கும் முக்கியத்துவம் கொடுக்கிறது. இதுதவிர ஐடி, நுகர்வுத்துறை, எலக்ட்ரானிக்ஸ், உற்பத்தித்துறை என பலதுறைகள் நல்ல நிலையில் உள்ளது. ஆன்லைன் வணிகம் இதில் மிகவும் சிறம்பம்சம் வாய்ந்த தொழிலாக(HIGHTLIGHT) ஆக இருக்கிறது.

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் டெக்னாலஜி மற்றும் வங்கித்துறைகளில் அதிகம் இருக்கிறார்கள். உதாரணமாக ஆன்ட்ராய்டு ஓ.எஸை வடிவமைத்த சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா ஆகியோர் இந்தியர்களே!

DSC_2660மேலும் கல்விக்கான பாடத்திட்டங்கள் மிகவும் தரமானதாக இருக்கும். தியரிகள் அல்லாது, தங்களுடைய பல்கலைக்கழக பாடத்தை வாழ்க்கையில் எங்கே Apply செய்வது போன்ற கல்வித்திட்டம் அந்நாட்டு பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படுகிறது என்று தன் பயணத்தின் சாராம்சத்தை விளக்கினார்.

இந்த பயணம் பற்றி ASIAN GLASS HOUSE நிறுவனத்தின் உரிமையாளரும் YES அமைப்பின் உறுப்பினருமான A.முஜிபுர் ரெஹ்மான் நம்மிடம் பேசியபோது, அமெரிக்காவைப் பொறுத்தவரைக்கும் அங்குள்ள மக்கள் நிதானமாக வேலை செய்கிறார்கள்; தங்களது கடமையை சரியாக செய்கிறார்கள்; எந்த பணியை செய்வதற்கும் யாருடைய உதவியையும் நாடுவதில்லை.

workersதிறமைக்கான அங்கீகாரம் இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அமெரிக்காவில் அதிகம் தான்! புதுமைக்கு வரவேற்பு அதிகமாக இருக்கிறது. குறைவான ஆட்களை வைத்து அதிகமான வேலைகளை வாங்கும் Lean Management அமெரிக்காவில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.மேலும் உலகில் எங்கெல்லாம் திறமையானவர்கள் இருக்கிறார்களோ, அவர்களை அமெரிக்கா தங்கள் நாட்டிற்கு வரவழைத்து குடியமர்த்துகிறார்கள். இதனால் தங்கள் வளர்ச்சியை அவர்களே நிர்ணயிக்கிறார்கள் என்று முஜிபுர் ரெஹ்மான் கூறினார்.

இப்பயணம் குறித்து TUSKER PAVERS நிறுவனத்தின் உரிமையாளரும் YES அமைப்பின் உறுப்பினருமான B.கண்ணதாசன் பேசியதாவது, அமெரிக்கர்கள் தங்கள் நாட்டின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கிறார்கள். டிசிப்ளின் அவர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்கிறார்.

இதுதவிர இந்த BIZCOVER AMERICA சுற்றுலாவில் நயாகரா நீர்வீழ்ச்சி, வால்மார்ட் மற்றும் பெரிய வர்த்தக வளாகங்களை சுற்றிப்பார்த்தல் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த பயணத்தில் அடங்கும்.
இறுதியாக ஜுன் 25ம் தேதி சான்பிரான்சிஸ்கோ இண்டர்நேஷனல் விமானநிலையத்திலிருந்து பயணக்குழுவின் ஒரு பகுதி தாயகம் புறப்பட்டு 26ம் தேதி சென்னை வந்தடைந்தனர்.