தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் வர்த்தக தூதுக் குழு அமெரிக்கா பயணம்
June 17, 2013
இந்தியாவுடனான வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதில் அமெரிக்கா தீவிரம்
July 4, 2013

கோலாம்பூர்-மதுரை இடையே நேரடி விமான சேவை

இவ்வாண்டு ஏப்ரல் மாதம் மலேசியாவின் ஏர் ஏசியா நிறுவனமும் இந்தியாவின் டாட்டா சன்ஸ் மற்றும் டெலஸ்ட்ரா டிரேட் நிறுவனங்களும் இணைந்து கூட்டாக ஏர்ஏசியா இந்தியா என்ற புதிய குறைந்த கட்டண விமான சேவை நிறுவனத்தை இந்தியாவில் துவங்க விருப்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட உடனே மதுரை-கோலாலம்பூர் பிரிவில் விமான சேவைக்கான தபரிமிதமான பயணிகள் மற்றும் சரக்குப்போக்குவரத்து வாய்ப்புகளை சுட்டிக்காண்பித்து அச்சேவையை ஏர் ஏசியா விரைவில் துவக்க வேண்டுமென தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் கேட்டுக்கொண்டது.

ஏர் ஏசியாவின் முதன்மை செயல் அதிகாரி திரு டோனி பெர்னான்டஸ் இவ்வாண்டு இறுதிக்குள் கோலாலாம்பூர்- மதுரை இடையே விமான சேவையை ஏர் ஏசியா துவக்கும் என டுவிட்டர் மூலம் தற்பொழுது உறுதி அளித்தள்ளது மிகுந்த மன நிறைவைத் தருவதாக உள்ளது இந்த அறிவிப்பை பாராட்டி வரவேற்கிறோம்.

சமீபத்தில் மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் E.M சுதர்சன நாச்சியப்பன் இதுகுறித்து ஏர் ஏசியா முதன்மை செயல் அதிகாரியிடம் வலியுறுத்தியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

மலேசியாவில் தென் தமிழகத்தைச் சார்ந்த தமிழ் பேசும் மக்களும் தொழிலாளர்களும் ஏராளமாக இருப்பது கணிசமான அளவில் இரு வழி விமான போக்குவரத்து நடைபெற காரணமாக இருக்கிறது. திருச்சி விமான நிலையத்திலிருந்து மலேசியாவிற்குச் சென்று வரும் பயணிகளில் 60 முதல் 70 சதவீத பயணிகள் தென் மவட்டங்களைச் சேர்ந்தவர்களே.

மதுரை-கோலாலம்பூர் நேரடி விமான சேவை துவங்கப்படுவது அப்பயணிகளின் போக்குவரத்துச் செலவையும் நேரத்தையும் குறைத்திடும். இச்சேவை மூலம் தென் தமிழகத்தில் சுற்றுலாத் துறையும் தொழில் வணிகமும் நன்கு வளர்ச்சி பெறும்.

கூடிய விரைவில் ஏர் ஏசியா நிறுவனம் கோலாலம்பூர் -மதுரை நேரடி விமானசேவையை துவக்கும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும், தென் தமிழக மக்களும் ஆவலுடன் எதரிர்பார்க்கின்றனர்.