நமது மாநிலத்திற்கான விமான திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற அமைச்சரை நியமிக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள்
September 20, 2013
வணிக வரித்துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள்
October 23, 2013

2013, நவம்பர் மாதம் 22-ம் நாள் முதல் மதுரை-துபாய் நேரடி விமான சேவை துவக்கம்

jeff-bezosஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை வரும் நவம்பர் மாதம் 22ம் தேதி முதல் துவங்குகிறது என்பதையும் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். தினசரி இரவு 11.30 மணிக்கு மதுரையிலிருந்து துபாய்க்கு விமானம் புறப்படும். பயணநேரம் சுமார் நான்கரை மணியாகும். நமது சங்கத்தின் தொடர் முயற்சிகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி. இது மதுரை உள்ளிட்ட தென் தமிழகத்திலிருந்து நிறைய தமிழர்கள் துபாயில் குடியேறி உள்ளார்கள். அத்துடன் தொழில் வணிகத்துறையை சார்ந்தவர்களும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் மதுரை- துபாய் இடையே பயணிக்கின்றனர்.

எனவே மதுரை துபாய் விமான சேவையைத் துவக்க ஏர் இந்தியா விமான நிறுவனத்தை வலியுறுத்துவதற்காக நமது சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பாக 22.01.2013 ம் நாள் துபாயில் ஒரு கலந்துரையாடல் கூட்டம் நடத்தி வாய்ப்புகளை எடுத்துக் கூறி விமானச் சேவையைத் துவக்க ஏர் இந்தியா நிறுவனத்தை வலியுறுத்தினோம். துபாயில் உள்ள இ.டி.ஏ ஏஸ்கான் ஸ்டார் நிறுவனத்தின் தலைவர் திரு. எம்.சலாவுத்தீன் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மதுரை- துபாய் அல்லது துபாய்- மதுரை இடையே தினசரி சுமார் 25 டிக்கெட்டுகளை தங்களுடைய ஊழியர்களுக்காக அவர்களது நிறுவனமே வாங்கும் என்றும் உறுதியளித்தார்.

இருப்பினும் ஏர் இந்தியா நிறுவனம் பல்வேறு காரணங்களினால் மதுரை- துபாய் விமான சேவையை துவக்கவில்லை. இச்சூழ்நிலையில் புதுடெல்லி, கூர்கானில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைமையகத்திற்கு வர்த்தக சங்கத்திலிருந்து தூதுக்குழு 06.02.2013 ம் நாள் சென்று அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. எஸ்.நடராஜன் அவர்களை சந்தித்து மதுரையிலிருந்து துபாய்க்கு நேரடி விமான சேவையை துவக்க வலியுறுத்தி வாய்ப்புகளை எடுத்துக்கூறினோம். அவர்கள் அதை ஏற்றுக்கொண்டதின் பயனாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தற்போது மதுரை- துபாய் விமான சேவையை துவக்கியுள்ளதை வெகுவாக பாராட்டி வரவேற்கின்றோம்.

மதுரை- துபாய் விமான பயணத்தில் நமது சங்கத்தின் சார்பாக ஓர் சுற்றுலா தூதுக்குழு துபாய் முதலிய நாடுகளுக்கு சென்று தென் தமிழகத்திற்கு அந்த நாடுகளிலிருந்து நிறைய சுற்றுலா பயணிகள் மதுரை விமான நிலையம் வழியாக வர பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளை சந்தித்து வலியுறுத்தவிருக்கின்றோம்.

26.04.2013 ம் நாள் மதுரை விமான நிலையத்தின் முன்பாக நமது சங்கத்தின் தலைமையில் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்திய தர்ணாப் போராட்டத்தின் காரணமாக மதுரை விமான நிலையம் வெளிநாடுகளுக்கு சரக்குகளை அனுப்பும் சுங்க விமான நிலையமாக 28.05.2013 ம் நாள் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. எனவே இலங்கை மற்றும் துபாய் நாடுகள் வழியாக பல்வேறு நாடுகளுக்கு இப்பகுதியிலிருந்து காய்கறி, பழங்கள், மல்லிகை உள்ளிட்ட மலர்கள், மதிப்பு கூட்டப்பெற்ற வேளாண் பொருட்கள், கைவினைப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள், ஜவுளி போன்ற பல்வேறு பொருட்களை மதுரை விமான நிலையம் மூலமாக அனுப்பும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த அரிய வாய்ப்பை தொழில் வணிகர்களும் வேளாண் பெருமக்களும் நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.

மதுரையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா, அபுதாபி, குவைத், தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு நேரடி விமான சேவையை துவக்குவதற்கும் இந்திய விமான நிறுவனங்களை வலியுறுத்துவதுடன் மதுரைக்கு பல்வேறு நாடுகளிலிருந்து நேரடி விமான சேவையைத் துவக்கத் தயாராக இருக்கும் வெளிநாட்டு விமான நிறுவனங்களும் இச்சேவையை துவக்கும் வகையில் அந்தந்த நாடுகளுடனான விமான போக்குவரத்து இருவழி ஒப்பந்தங்களில் மதுரை விமான நிலையத்தை சேர்க்கவும் மத்திய அரசை வலியுறுத்தவும் நமது சங்கம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது.

மதுரை விமான நிலையத்திற்கு பல்வேறு நாடுகளிலிருந்து நேரடி விமான சேவைகள் கிடைப்பதன் மூலமே தொழில் மற்றும் பொருளாதாரம் வளர்ச்சி காண முடியும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.