2014-2015-ம் ஆண்டிற்கான இடைக்கால இரயில்வே பட்ஜெட் – சங்கத்தின் கருத்து
February 13, 2014
மத்திய இடைக்கால பட்ஜெட் – தொழில் வர்த்தகத் துறையினருக்கு ஏமாற்றம்
February 18, 2014

புதுடில்லியில் அனைத்து வணிகர்களின் சம்மேளனம் நடத்தும் தேசிய மாநாடு ! விரைவில்..

confederation-of-all-india-tradersநமது சங்கத்தின் முதுநிலை தலைவர் திரு.S.இரத்தினவேல், senior vice- president ஆக அங்கம் வகிக்கும் புதுடில்லியில் உள்ள அனைத்து வணிகர்களின் சம்மேளனம் (Confederation of all india traders, New delhi) புதுடில்லியில் 27.02.2014 மற்றும் 28.02.2014-ம் தேதிகளில் தேசிய அளவிலான மாநாடு ஒன்றை சிறப்பாக நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக திரு. B.C.பார்த்தியா அவர்களும், பொதுச் செயலாளராக திரு பிரவின் கண்டேல்வால் அவர்களும் மிகச் சிறப்பாக செயலாற்றி வருகின்றனர். உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தினால் (Food Safety and Standards Authority of india-FSSAI) வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்கள் உள்ளிட்ட வணிகர்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு வரிப் பிரச்னைகள் குறித்து இக்கூட்டத்தில் விரிவாக விவாதித்து தேசிய அளவில் வணிகர்களின் ஏகோபித்த கருத்தை மத்திய அரசிடம் கோரிக்கையாக சமர்ப்பிக்க உள்ளனர்.

CAIT சார்பில் நடைபெறவிருக்கும் இந்த தேசிய அளவிலான மாநாட்டில் நமது சங்கத்தின் சார்பில் செயற்குழு உறுப்பினர்கள் அதிக அளவில் பங்கேற்க வசதியாக, 05.02.2014-ம் நாள் நடைபெற்ற நமது சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில், மேற்கண்ட மாநாட்டில் கலந்துகொள்ளும் நம் சங்க செயற்குழு உறுப்பினர்களுக்கு புதுடில்லியில் தங்கும் வசதி, உணவு மற்றும் போக்குவரத்து ஆகிய ஏற்பாடுகளை 27.02.2014 & 28.02.2014-ம் நாட்களுக்கு நமது சங்கத்தின் சார்பில் செய்து தரப்படும். புதுடில்லி சென்று வரும் ஏற்பாடும், செலவும் செயற்குழு உறுப்பினர்களே தங்கள் பொறுப்பில் செய்துகொள்ள வேண்டும்.

இம்மாநாட்டில் கலந்துகொள்ளவிருக்கும் செயற்குழு / மாவட்டப் பிரதிநிதிகள் / பன்னாட்டு வர்த்தக மேம்பாட்டுக் குழு உறுப்பினர்கள் உடனடியாக நம் சங்கத்திற்கு கடிதம் / மின் அஞ்சல் மூலம் தெரிவித்தால் தங்கும் வசதிகள் முன்னதாகவே செய்ய வசதியாக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.