2013, நவம்பர் மாதம் 22-ம் நாள் முதல் மதுரை-துபாய் நேரடி விமான சேவை துவக்கம்
October 18, 2013
வணிகவரித்துறை அமைச்சர் திரு B.V. ரமணா அவர்களுடன் சந்திப்பு
October 25, 2013

வணிக வரித்துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள்

002வணிக வரித்துறை அதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள் குறித்து 22.10.2013-ம் நாள் நடைபெற்ற இணைப்புச் சங்கங்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தின் நடவடிக்கைகளும், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும்.

மதுரை வணிக வரித்துறை இணை ஆணையரின் அதிகார வரம்பிற்குட்பட்ட மதுரை, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகங்கை, தேனி ஆகிய மாவட்டங்களில் வணிக வரி அதிகாரிகளின் கெடுபிடிகள் மிக அதிகமாக இருப்பதாகவும், லஞ்சம் கேட்டு மிரட்டுவதாகவும், இதனால் நிம்மதியாக தொழில் வணிகம் செய்ய முடியவில்லை என்றும் இம்மாவட்டங்களைச் சார்ந்த பல்வேறு இணைப்புச் சங்கங்களும், சங்க அங்கத்தினர்களும் கடிதம் மூலமாகவும், அலைபேசி மூலமாகவும் நம் சங்கத்திற்கு தெரிவித்ததன் அடிப்படையில், 22.10.2013-ம் நாள் செவ்வாய் கிழமை, பவளவிழா ஹட்சன் பேரவை அரங்கில் இணைப்புச் சங்கங்கள் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ளும் ஓர் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் திரு.N.ஜெகதீசன் தலைமை வகித்து வரவேற்புரையாற்றினார். முதுநிலை தலைவர் திரு. S. இரத்தினவேல் முன்னிலை வகுத்து கூட்டத்தின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் இணைப்புச் சங்கப் பிரதிநிதிகளும், பல தொழில் வர்த்தகர்களும் திரளாகக் கலந்துகொண்டு வணிக வரித் துறையைச் சார்ந்த சில அதிகாரிகளின் அத்து மீறல்களையும், லஞ்சம் கேட்டு மிரட்டுவதையும் கீழ்கண்டவாறு விவரித்தனர்:

அ) மதுரை வணிகவரித்துறை இணை ஆணையர், வணிகவரிச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து
சான்றிதல் பெற்றுள்ள தொழில் வணிகர்களை அழைத்து அவரவர்களுடைய ஆண்டு
விற்பனைத் தொகை அடிப்படையில் லஞ்சம் கேட்டு மிரட்டுகிறார்.

அமைச்சர் மற்றும் உயரதிகாரிகளின் ஆணைப்படி அவர்களுக்காகத்தான் லஞ்சம் பெறுவதாகக் கூறி, அவ்வாறு லஞ்சம் தராத வணிகர்களது நிறுவனங்கள் ரெய்டுக்கு உட்படுத்தப்படும் என்றும், வரி, அபராதம், வட்டி என பெரும் தொகை செலுத்த வேண்டி வரும் என்றும் மிரட்டுகிறார். அவருக்கு கீடிந பணியாற்றும் இந்த 5 மாவட்டங்களிலும் உள்ள வணிகவரி அதிகாரிகள் பலரும் அவரைப்போலவே லஞ்சம் கேட்டு மிரட்டுகின்றனர்.

ஆ) அவ்வாறு ரெய்டுக்கு வரும்பொழுது அதிகாரிகள், வரி ஏய்ப்பு நடந்திருக்கிறதா என்று
ஆய்வு செய்யாமல் வரி ஏய்ப்பு அல்லாத சிறு சிறு டெக்னிக்கல் தவறுகளைக் கூட
பெரிதாகக்கூறி மிரட்டி லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருக்கிறார்கள். தவறு எதுவும்
இல்லை என்றாலும் அதைப் பாராட்டாமல் நாங்கள் இத்தனை ஆபீஸர்
வந்திருக்கிறோம் லஞ்சம் கொடுங்கள் என்று வலியுறுத்துகிறார்கள்.

ஆய்வு செய்வதற்கான உயர் அதிகாரியின் அனுமதிக் கடிதமும் கொடுப்பதில்லை. கேட்டால் மிரட்டுகிறார்கள். பல அதிகாரிகள் ஒரே நேரத்தில் சோதனை என்ற பெயரில் கடையையே புரட்டி எடுத்து, ஓர் அச்ச உணர்வை ஏற்படுத்தி, கேள்விகள் கேட்கும் சூழலில் அவற்றுக்கு ஒரே ஆளாக இருந்து பதிலளிக்க வேண்டிய வணிகருக்கு எந்தவித சட்டப் பாதுகாப்பும் இல்லாமல் உள்ளது.

நண்பரையோ, வணிக சங்க நிர்வாகியையோ உடனிருக்கக் கூட அனுமதிப்பதில்லை. முன்னறிவிப்பு கொடுத்துத்தான் நிறுவனங்களுக்குக் கணக்குகளை ஆய்வு செய்யச் செல்ல வேண்டும் என்று சட்டத்தில் குறிப்பிட்டிருந்தாலும் அதிகாரிகள்
இப்பொழுது அதை நடைமுறைப்படுத்துவதில்லை. அவர்களுக்குப் பணம் தேவைப்படும்
பொழுதெல்லாம் இன்ஸ்பெக்ஷன், ரெய்டு என்று கூறிக்கொண்டு ஏதாவது ஒரு கடைக்குள்
புகுந்து மிரட்டி லஞ்சம் வாங்கிச்செல்கின்றனர்.

இ) சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்களை எங்காவது நடுவழியில் (பெரும்பாலும் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில்) சோதனை என்ற பெயரில் வணிகவரி அதிகாரிகள் தடுத்து நிறுத்தி, சரக்குகளுக்கான எல்லா ஆவணங்களும் சரியாக இருந்தாலும் தேவையில்லாத ஆவணங்களைக் கேட்டு மதிப்புக் கூட்டு வரிச் சட்ட விதிகளுக்கு தங்கள் இஷ்டப்படி தவறான விளக்கம் கொடுத்து, தவறு இருப்பதாகக் கூறி, வாகனத்தை நீண்டநேரம் நிறுத்தி படிப்பறிவில்லாத டிரைவரை மிரட்டி லஞ்சம் வாங்குகிறார்கள்.

பாவம் டிரைவரால் என்ன விளக்கம் தர முடியும். சரக்கின் உரிமையாளருடன் மொபைல் போனில் பேசும்படி டிரைவர் கேட்டால் மறுத்துவிடுகிறார்கள். அதிகாரியின் பெயரைக் கூறும்படி, டிரைவர் கேட்டால் மிகவும் கோபமடைந்து பெயரைச் சொல்லாமல் ‘ஓரமாகப் போய் நில்!’ என்று மிரட்டுகிறார்கள். மொத்தத்தில் சமூக விரோதிகள் செய்யும் வழிப்பறிக் கொள்ளைபோல் இது நடக்கிறது.

சரக்கு உரிமையாளருக்கு பதிலளிக்க வாய்ப்பே கொடுக்காமல் சாதாரண அலுவலர்களே இறுதி முடிவு செய்து அபராதம், அட்வான்ஸ், டாக்ஸ், காம்பவுண்டிங் வசூலிக்கும் நடைமுறை எந்தச் சட்டத்திலும் இல்லாத கொடுமையாகும்.
இது மதிப்புக்கூட்டுவரிச்சட்டத்தின் நோக்கத்திற்கே முரணானது.

ஈ) ரெய்டு மற்றும் வாகன சோதனையின்போது வணிகவரித் துறை அதிகாரிகள் வணிகர்களை மிரட்டி லஞ்சம் வாங்குவது மட்டுமல்லாது, வெந்தபுண்ணில் வேலைப்பாய்ச்சுவது போல், அதற்குமேல் ஒரு தொகையையும் அரசுக்கு அபராதமாகவோ அல்லது அட்வான்ஸ் வரியாகவோ அல்லது ஆகவோ ரசீது கொடுத்து வாங்குகிறார்கள்.

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வந்தால் தாங்கள் வரி ஏய்ப்புக்கு எதிராகக் கடுமையாக நடந்து கொள்வதால்தான் வணிகர்கள் தங்கள் மீது வேண்டுமென்றே குற்றச்சாட்டு சொல்கிறார்கள் என்று கூறுவதற்கும், பாருங்கள் அரசுக்கு கூடுதல் வருவாயைப் பெற்றுத் தந்திருக்கிறோமே என்று கூறி தற்காத்துக் கொள்வதற்கும் தான் திட்டம்போட்டு
வணிகர்களை துன்புறுத்துகிறார்கள். இதை தமிழக அரசு புரிந்து கொள்ளவேண்டும்.

inspection செய்யும் போது cross verification என்ற பெயரில் வணிகர்களை சிரமப்படுத்துகிறார்கள். வணிகர்கள் தங்களுடைய கொள்முதல் பில்களையும் அரசுக்கு வரி செலுத்தியதற்கான ஆவணமும் சமர்ப்பித்தால் போதுமானது என பல தீர்ப்புகள் வந்து விட்ட சூழலிலும் அதிகாரிகள் அதை பொருட்படுத்தாமல் சிரமப்படுத்துகிறார்கள்.
சரக்கை எண்ணிக்கை அடிப்படையில் சரிபார்க்காமல் மதிப்பு அடிப்படையில் இருப்பு சரக்கை கணக்கீடு செய்யும் சட்டவிரோத முறையை அதிகாரிகள் கடைப்பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். இதற்கெல்லாம் பதில் அளிக்க வாய்ப்பே கொடுப்பதில்லை.

ஊ) நேர்மையாக வணிகம் செய்து அரசுக்கு முறையாக வரி செலுத்துவோருக்கு எந்த மரியாதையும் இல்லை. எங்களுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு இஷ்டம் போல் வணிகம் செய்யுங்கள் என அதிகாரிகளே சொல்கிறார்கள்.

கலந்துரையாடலுக்குப் பின் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  • வணிகவரித் துறை அதிகாரிகள் மீது தொழில் வணிகம் செய்கின்றவர்கள் சாதாரணமாக குற்றச்சாட்டுகளைச் சுமத்த முன்வரமாட்டார்கள்.
  • ஆங்காங்கே சில அதிகாரிகள் சிறிய அளவு லஞ்ச ஊழலில் ஈடுபடும் போது, தாங்கள் தொடர்ந்து வணிகம் செய்ய வேண்டுமே என்ற உணர்விலும், லஞ்ச லாவண்ய குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாது என்ற காரணத்தாலும் வணிகர்கள் அதைச் சகித்துக்கொள்கிறார்கள்.
  • அப்படிப்பட்ட அமைதியான வணிகர்கள் பொங்கி எழுந்திருக்கிறார்கள்,அதிகாரிகள் மீது நேரடியாக குற்றம் சுமத்துகிறார்கள், கடையடைப்புப் போராட்டம் நடத்துகிறார்கள். என்றால் லஞ்ச லாவண்ய கெடுபிடிகளும், மிரட்டல்களும் எந்த அளவுக்குச் சென்றிருக்கும் என்பதை தமிழக அரசு புரிந்துகொள்ள வேண்டுகிறோம்.
  • சுமார் ரூ. 50,000 கோடியை வணிக வரியாக, தங்களுக்கு எந்தவித ஊதியமும் இன்றி, வசூலித்து அரசுக்குச் செலுத்தி தமிழக அரசின் மொத்த வருவாயில் 65 சதவிகிதம் பெற்றுத் தந்து தமிழக அரசின் செயல்பாடுகளை இயங்கச் செய்யும் லட்சக்கணக்கான வணிகர்களுக்கு இது போன்ற மிரட்டல்களிலிருந்து உரிய பாதுகாப்பு
  • அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
  • இல்லையெனில் மிகச்சிறப்பாக நடைபெற்று வரும் தமிழக அரசின் மீது, தமிழகத்தில் உள்ள வணிகவரி சட்டத்தின் கீழ் பதிவு பெற்றுள்ள 6 லட்சம் வணிகர்களும், பதிவு செய்ய வேண்டாத அதற்கும் கூடுதலான சிறிய வணிகர்களும், அவர்களது குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் என சுமார் 1 கோடிக்கும் மேலான மக்கள் அதிருப்தி கொள்வார்கள்.
  • எனவே நம் மாநில அரசு இத்தகைய ஊழலை புற்றுநோடீநு போல் பரவ விடாமல் உடனே தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கான நடைமுறைகளை உடனே அமல்படுத்த வேண்டும். வணிகவரித் துறையில் உள்ள லஞ்ச லாவண்ய ஊற்றுக் கண்களை அடைக்க வேண்டும்.
  • தொழில் வணிகத் துறையினர் உற்சாகமாகவும், நேர்மையாகவும், நிம்மதியாகவும் வணிகம் செய்து அரசுக்கு அதிக அளவில் வரி வருமானம் கிடைக்கச் செய்ய தமிழக அரசு கீழ்கண்ட நடவடிக்கைகளை உடனே எடுக்க தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் மற்றும் அதன் இணைப்புச் சங்கங்களின் சார்பாக வேண்டுகோள் விடுக்கிறோம்.
  •  தொழில் வணிகத் துறையினர் தங்களுடைய சிரமங்களை எடுத்துக் கூறி உடனுக்குடன் நிவாரணம் பெறவும், ஆலோசனைகள் வழங்கவும் வாய்ப்புகள் கொடுத்த, வணிக வரி அமைச்சரின் தலைமையில் உயர் அதிகாரிகள் மற்றும் வர்த்தக சங்க பிரிதிநிதிகளை உள்ளடக்கிய மதிப்பு கூட்டு வரி அமலாக்க கண்காணிப்பு குழு VAT Implementation Monitoring Commitee)
  • முதலமைச்சர் தலைமையில் வணிகவரித்துறை அமைச்சரை துணைத் தலைவராகவும், நிதித்துறை, வணிகவரித்துறை அதிகாரிகள், வர்த்தக சங்க பிரிதிநிதிகள் ஆகியோரை உறுப்பினர்களாக கொண்ட வணிகர் நல வாரியம் ( Traders Welfare Board) ஆகிய இரண்டு அமைப்புகளையும் உடனே மீண்டும் ஏற்படுத்தி மாதம் மாதம் கூட்டம் நடத்த அறிவுறுத்தப்பட வேண்டும்.
  • சரக்கு வாகனங்களை நிறுத்தி சோதனை போடும் போதும், வணிக நிறுவனங்களில் ஆய்வு அல்லது ரெய்டு செய்யும் போதும் அதிகாரிகளும், வணிகர்களும் “எப்படி நடந்துகொள்ள வேண்டும்; எப்படி நடத்து கொள்ளக்கூடாது” என்பதற்கான விரிவான அறிவுரைகள், அதாவது “Do’s and Don’ts” உடனடியாக வெளியிடப்பட்டு அதன்படிதான் நடந்துகொள்ள வேண்டும் என இரு தரப்பினருக்குமே அறிவுறுத்த வேண்டும்.
  • சோதனையின்போது கண்டுபிடிக்கும் தவறுகளை சம்பந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிகளுக்கு அனுப்பி அவர் விசாரித்து முடிவு எடுக்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும்.
  • தன்னுடையவிளக்கத்தை அளிக்க வணிகருக்குப் போதிய அவகாசம் கொடுக்காமல், சோதனை இடத்திலேயே அதிகாரிகள் முடிவு செய்து அபராதம், அட்வான்ஸ் வரி, காம்பவுண்டிங் பீஸ் போன்ற எதுவும் வசூலிக்க எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. நீதிமன்ற தீர்ப்புகளின் படி ஒரே நாளில் இருக்க முடியாது.
  • நடுவழியில் நடைபெறும் வாகன சோதனையின்போது சோதனையிடும் அதிகாரி தன்னுடைய பெயர், பதவி, மொபைல் போன் எண் ஆகியவற்றை டிரைவரிடம் தெரிவிக்க வேண்டும். சரக்கின் உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுகுற்றச்சாட்டை மறுத்து “விளக்கம் கேட்டு நோட்டீஸ்” கொடுக்க வலியுறுத்தினால் அவ்வாறு நோட்டீஸை டிரைவரிடம் கொடுத்து வாகனத்தை உடனே அனுப்பி விட வேண்டும்.
  • நோட்டீஸ் நகலை உடனே சம்மந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிக்கு அனுப்பி அதன் மீது விசாரித்து முடிவெடுக்கும் அதிகாரம் வரிவிதிப்பு அதிகாரிக்கே இருக்க வேண்டும். நடு வழியில் அதிகாரிகள் அபராதம் என்றோ, காம்பவுண்டிங் பீஸ் என்றோ, அட்வான்ஸ் வரி என்றோ பணம் வசூல் செய்ய எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது.
  • நீதிமன்ற தீர்ப்புகளின் படி Inspection, Enquiry, Process, Judgement and Execution ஒரே நாளில் இருக்க முடியாது. Inspection and Raid செய்வதை வீடியோ படம் எடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்.
  • நடுவழியில் நடைபெறும் வாகன சோதனையின்போது சோதனையிடும் அதிகாரி தன்னுடைய பெயர், பதவி, மொபைல் போன் எண் ஆகியவற்றை டிரைவரிடம் தெரிவிக்க வேண்டும். சரக்கின் உரிமையாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டுகுற்றச்சாட்டை மறுத்து “விளக்கம் கேட்டு நோட்டீஸ்” கொடுக்க வலியுறுத்தினால் அவ்வாறு நோட்டீஸை டிரைவரிடம் கொடுத்து வாகனத்தை உடனே அனுப்பி விட வேண்டும்.
  • நோட்டீஸ் நகலை உடனே சம்மந்தப்பட்ட வரி விதிப்பு அதிகாரிக்கு அனுப்பி அதன் மீது விசாரித்து முடிவெடுக்கும் அதிகாரம் வரிவிதிப்பு அதிகாரிக்கே இருக்க வேண்டும். நடு வழியில் அதிகாரிகள் அபராதம் என்றோ, காம்பவுண்டிங் பீஸ் என்றோ, அட்வான்ஸ் வரி என்றோ பணம் வசூல் செய்ய அனுமதிக்கப்பட்டாலே அது லஞ்ச லாவண்யத்திற்கு ஊற்றுக்கண்ணாகத்தான் அமையும். லாவண்யத்திற்கு ஊற்றுக் கண்ணாகத்தான்அமையும்.
  • எஸ்.எம்.எஸ், இமெயில் என்று தகவல் தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துவிட்ட சூழலில், வங்கி, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமலில் இருப்பதுபோல் ஒவ்வொரு பதிவு பெற்ற வணிகரும் தங்களது ஒரு மொபைல் தொலைபேசி என்னை பதிவு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும்.
  • அந்தஎண்ணிலிருந்து தொடர்பு கொண்டாலே சரக்கின் உரிமையாளர் பேசுகிறார் என்றுதான் அர்த்தம்; அந்த எண்ணிலிருந்து சோதனை செய்யும் அதிகாரியின் மொபைல் எண்ணுக்கு “சரக்கு தங்களுடையதுதான் என்றும், குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்றும், விளக்கம் அளிக்க வாய்ப்பு தரும் நோட்டீஸ் கொடுங்கள் என்றும் வாகன
  • சோதனையின் போது எஸ்.எம்.எஸ் அனுப்பினால் அந்த கோரிக்கையை ஏற்று டிரைவரிடம் அவ்வாறு நோட்டீஸ் கொடுத்துவிட்டு சரக்கு வாகனத்தை தாமதம் இல்லாமல் உடனே அனுப்பிவிட்டு கோப்புகளை சம்பந்தப்பட்ட வரிவிதிப்பு அதிகாரிக்கு அனுப்பவேண்டும். வாகன சோதனை அதிகாரிக்கு வசூல் இலக்கு நிர்ணயிப்பதுதான் அனைத்து தவறுகளுக்கும் மூலக்காரணமாகும். அரை மணி நேரத்திற்கு மேல் எந்த சரக்கு வாகனத்தையும் நிறுத்தக் கூடாது என அதிகாரிகளுக்குஉத்தரவிடவேண்டும்.
  • லஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான அதிகாரிகள் மீது தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி மேல்நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • WW என்ற ஆண்டு படிவம் சமர்பிக்க வலியிறுத்தப்படுகிறது. இது வேண்டியதில்லை ஏனெனில்மாதாமாதம் சமர்பிக்கப்படும் ரிட்டர்ன் படிவத்தில் கண்ட தகவல்கள் தான் அதில் மீண்டும் கொடுக்க வேண்டி உள்ளது.
  • அதிகாரிகள் வேலை வணிகர்கள் மீது சுமத்தப்படுகிறது. தேவையற்ற இந்த படிவத்தை தணிக்கையாளரிடம் பெறுவதற்கு கூடுதலான கொடுக்கவேண்டியுள்ளது. எனவே இந்த படிவத்தை ரத்து செய்ய வேண்டுகிறோம். இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்ட மேற்கண்ட நடவடிக்கைகளைப் பரிசீலித்து அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டுமென தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.
  • தமிழகத்தில் உள்ள தொழில் வணிகத் துறையினருக்கு வணிகவரி அதிகாரிகளினால் ஏற்பட்டுள்ள சிரமங்களை விரிவாக நேரில் எடுத்துக் கூறவும், இப்பிரச்னைகள் தொடராமல் இருக்க கூறப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தரவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  • வணிகவரிஅதிகாரிகளின் லஞ்ச மிரட்டல்கள் இன்றி வணிகர்கள் நிம்மதியாக வணிகம் செய்வதை உறுதிப்படுத்தும் வகையில் உரிய அறிவிப்புகளை தமிழக அரசு அதிகபட்சமாக ஒரு மாத காலத்திற்குள் அறிவிக்கும் என உறுதியாக நம்புகிறோம்.
  • தேவை ஏற்படின் 2013 டிசம்பர் மாதம் முதல் வாரம் மீண்டும் கூடி விவாதித்து மேல் நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.