சிலம்பு எக்ஸ்பிரஸை செங்கோட்டை வர நீட்டிக்கும்படி கோரிக்கை
January 4, 2014
கட்டுமானப் பணிகளுக்கு ஏற்றது கிராவல் மணல்
January 18, 2014

மிகவிரைவில் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்: டி.ஆர்.பாலு எம்.பி தகவல்

chamber-t.r.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு வந்த ரெயில்வே நிலைக்குழுத்தலைவர்
டி.ஆர்.பாலு எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது:

தஞ்சாவூர், மயிலாடுதுறை மற்றும் மானாமதுரை செங்கோட்டை இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னைக்கும் தஞ்சாவூருக்கும் இடையே அண்மையில் விடப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயங்கி கொண்டிருக்கின்றது. இது காலை 7.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடைகிறது.

இதைப்போல் சென்னை மானாமதுரை இடையே காரைக்குடி வழியாக செல்லும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 7.45 மணிளவில் மானாமதுரை வந்து சேருகிறது. இந்த இரு வண்டிகளும் மறு மார்க்கத்தில் திரும்பவும் இரவு சென்னைக்கு புறப்படும் வரை முறையே தஞ்சை மற்றும் மானாமதுரை ரெயில் நிலையங்களில் சுமார் 12 மணி நேரம் நிறுத்தி வைக்கப்படுகின்றன.

எனவே, உழவன் எக்ஸ்பிரஸ் ரெயிலை தஞ்சாவூர் மயிலாடுதுறை வழித்தடத்தில் பகல் வேளையில் புதிய எக்ஸ்பிரஸ் சேவையில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி காலை 9.40 மணிக்கு தஞ்சாவூரில் இருந்து புறப்பட்டு கும்பகோணம், ஆடுதுறை வழியாக 11 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும், மறுமார்க்கத்தில் மாலை 3.45 மணிக்கு மயிலாடுதுறையில் இருந்து புறப்பட்டு 5.05 மணிக்கு தஞ்சாவூர் திரும்பும்.

அதேபோல், சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலை மானாமதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் வழியாக செங்கோட்டை வரை சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயிலாக இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரெயில் காலை 9.15 மணிக்கு மானாமதுரையிலிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.15 மணிக்கு செங்கோட்டை சென்றடையும். மறுமார்க்கத்தில் 2.30 மணிக்கு செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு மாலை 6.30க்கு மானாமதுரை வந்து சேரும்.

நீடாமங்கலம் ரெயில் நிலையம் அருகில் ரூ.30 கோடி செலவில் சாலை மேம்பாலம் அமைக்கவும், பயணிகளும் சிறு வாகனங்களும் கடந்து செல்ல வசதியாக ரெயில்பாதைக்கு அடியில் நவீன தொழிற்நுட்ப முறையில் சுரங்கப்பாதை அமைக்கவும் ரெயில்வே வாரியத் தலைவர் அனுமதி கொடுத்துள்ளார்.

ரூ.5 கோடி செலவில் அமைய இருக்கின்ற சுரங்கப்பாதைக்கான கட்டுமானப் பணிகளுக்கு ஒப்பந்த புள்ளிகளை உடனடியாக கோருவதற்கும் அனுமதி கடிதத்தை தென்னக ரெயில்வேக்கு ரெயில்வே வாரியம் வழங்கியுள்ளது.

இலங்கைச் சிறைகளில் 3 மாதங்களாக வாடும் தமிழக மற்றும் புதுவை மீனவர்களை விடுதலை பெற்று தருவதில் மத்திய அரசு போதிய அக்கறை செலுத்தாமல் மெத்தனப்போக்கை கடைப்பிடிப்பதாலும் இலங்கை அரசுடன் நேரடித்தொடர்பு கொண்டு விரைவான நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாலும் மீனவர்களின் விடுதலை தாமதம் ஆவதாக 5 மாவட்டங்களில் உள்ள மீனவ சமுதாயத்தினரும் ஆழ்ந்த துயரத்தில் உள்ளனர்.