ஜெட் ஏர்வேஸ் தலைவர் திரு. நரேஷ் கோயலுக்கு நமது சங்கத்தின் வேண்டுகோள்
July 31, 2013
நமது மாநிலத்திற்கான விமான திட்டங்களை மத்திய அரசிடம் வலியுறுத்திப் பெற அமைச்சரை நியமிக்க முதலமைச்சருக்கு வேண்டுகோள்
September 20, 2013

நம் இந்தியத் திருநாட்டின் 67-வது விடுதலை நாள் விழாவில்…

67th Independence Day Celebration - Photo67வது சுதந்திர தின விழாவில் நம் சங்கத்தின் தலைவர் திரு.ஜெகதீசன்அவர்கள் ஆற்றிய உரை:

பாரம்பரியம் மிக்க நமது தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் நமது இந்தியத் திருநாட்டின் 67வது விடுதலைநாள் விழாவில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது காலை வணக்கத்தையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டு எனது விடுதலைநாள் உரையை நிகழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மீட்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க கோரிக்கை

சென்ற 2012-2013 நிதிஆண்டில் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 10 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு 5 சதவீதமாக குறைந்தது. நடப்பு நிதி ஆண்டிலும் இதே நிலை நீடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

அந்நிய செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவிற்கும் இடையே உள்ள வித்தியாசம் தான் “நடப்புக் கணக்கு பற்றாக்குறை” (Current Account Deficit CAD) (Trade Deficit) (FII)–என்று குறிப்பிடப்படும். நடப்பு நிதி ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 4.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு அளவான 2.5 சதவீதத்தைக் காட்டிலும் 2 சதவீதம் அதிகமாகும்.

கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றன. சீனாவின் பொருளாதார வளர்ச்சியும் குறைந்துள்ளது. அமேரிக்க பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையிலும் அந்நாடு இன்னும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பவில்லை. இதுபோன்ற காரணங்களால் நம் நாட்டின் ஏற்றுமதி குறைந்துள்ளது.

நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில் ஏற்றுமதி1.4 சதவீதம். அதாவது 7,246 டாலராக (ரூ. 4.55 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது. ஏற்றுமதி குறைந்து வரும் நிலையில் இறக்குமதி அதிகரித்துள்ளதால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

இந்தியாவிற்கு சீனா, சவுதி அரேபியா, ஈராக், குவைத் உள்பட 80 நாடுகளுடன் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளது எனவும் 2012-2013-ம் ஆண்டில் நமது நாட்டின் ஏற்றுமதியின் அளவு 300 பில்லியன் டாலராகவும், இறக்குமதியின் அளவு 491.9 பில்லியன் டாலராகவும், வர்த்தகப் பற்றாக்குறை 191.6 பில்லியன் டாலராகவும் இருந்ததாக மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு. ஆனந்த் சர்மா சமீபத்தில் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்றுமதியை ஓரளவு ஊக்குவிக்கும் விதமாக ஏற்றுமதி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் வட்டி மானிய சலுகை இந்த ஆகஸ்ட் மாதம் முதல் 2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. கச்சா எண்ணெய், சமையல் எண்ணெய், நிலக்கரி, பருப்பு உள்பட பெருமளவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.

அந்நிய நிதி நிறுவனங்கள் ஜூன் – ஜூலை மாத காலத்தில் இந்தியப் பங்குகளில் மேற்கொண்ட முதலீட்டிலிருந்து ரூ.17,000 கோடியை விலக்கிக் கொண்டுள்ளன. பணவீக்க உயர்வு காரணமாக பொதுமக்கள் அதிலும் குறிப்பாக நம்நாட்டில் 40 சதவீதத்திற்கு மேல் உள்ள நடுத்தர வருவாய் பிரிவு மக்கள் தங்கள் வருமானத்திற்குள் அத்தியாவசியச் செலவுகளைக் கூட சரிப்படுத்த முடியாமல் திணறுகிறார்கள்.

இதனால் கையில் நிகர பணப்புழக்கம் இல்லாமல் வேறு பொருட்கள் வாங்குவதை மக்கள் நிறுத்தி விட்டார்கள். கச்சாப் பொருட்களின் விலை உயர்வால் உற்பத்திப் பொருட்களின் விலையும் கூடுகிறது. பொருட்களை கட்டுப்படியான விலைக்கு விற்கமுடியாமல் உற்பத்தியை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் வேலை இழப்பு ஏற்படுகிறது. நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நாளுக்கு நாள் மிகவும் பாதிக்கப்பட்டு அனைத்துத் தரப்பினரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிஅடைவதை தடுத்து நிறுத்தி மீண்டும் ஏற்றம் காண உரிய நடவடிக்கைகள்
எதையும் மத்திய அரசு விரைந்து எடுப்பதாகத் தெரியவில்லை. வீழ்ச்சிக்கான காரணங்களை மட்டும்
சொல்லி பொருளாதாரம் தானாக மேம்பட்டும் என மத்திய அரசு கருதுவதுபோல் தெரிகிறது.

யதார்த்த நிலைமைக்கேற்ற பொருளாதார கொள்கை மாற்றம் செய்ய மத்திய அரசு கௌரவம் பார்க்கிறது; தயங்குகிறது. பல நாடுகளின் நாணய மதிப்பு வீழ்ச்சியடைந்தாலும், வளர்ந்து வரும் நாடுகளில் நம் நாட்டு நாணயத்தின் வீழ்ச்சி மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒருவரை ஒருவர் குற்றம் சொல்வதால் எந்தப்பயனும் இல்லை. இந்நிலையில் முதலீட்டினை குறிப்பாக அந்நிய முதலீட்டினை ஈர்ப்பதற்கான பல ஊக்குவிப்புத் திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. இருப்பினும் பல்வேறு அனுமதிகளைப் பெறுவதில் உள்ள காலதாமதத்தினால் இத்திட்டங்களினால் ஏற்படும் பலனை உடனடியாக பெற இயலவில்லை. பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த கடனுக்கான வட்டி குறைக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம்.

ஆனால் பாரத ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஆய்வறிக்கையில் முக்கிய கடன்களுக்கான வட்டி குறைக்கப்படாததால் தொழில் துறையினர் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்துள்ளனர்.

எனவே, வீழ்ச்சி அடைந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பையும், நாட்டின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும், பொருளாதார வல்லுநர்கள் ஒருங்கிணைந்து நிலைமையை முற்றிலும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் உடனடியாக எடுத்து நம் பொருளாதார வளர்ச்சி வேகத்தை மீட்க வேண்டும் என்பதே நம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் கோரிக்கையாகும்.

இச்சூழ்நிலையில் மத்திய நிதி அமைச்சகமும், வர்த்தகத் துறை அமைச்சகமும் எடுத்து வரும்
நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு காரணங்களினால் நம் நாட்டின் ஏற்றுமதி 11.64 சதவீதம்
இவ்வாண்டு ஜுலையில் உயர்ந்திருப்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.

ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும், தேவையான சலுகைகளை வழங்கவும் மத்திய அரசு உடனடியாக முன்வர வேண்டும் என தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்துகிறது. அதேபோல் இறக்குமதி செடீநுயப்படும் அத்தியாவசியமற்ற பொருள்களின் இறக்குமதி வரியை உயர்த்துவதும் சரியான நடவடிக்கைகள் ஆகும். அத்துடன் நம் நாட்டு உற்பத்தித் தொழிற்சாலைகளை பாதிக்கக் கூடிய வகையில் தயாரிப்புப் பொருளாக இறக்குமதி செய்யப்படுவதைத் தடுக்க அவற்றின் இறக்குமதி வரியை மிகவும் உயர்த்த வேண்டும்.

பன்முகபிராண்ட்சில்லரைவணிகத்தில்அந்நியநேரடிமுதலீட்டிற்கானநிபந்தனைகள்
தளர்த்தப்படுவதற்குநமதுகடுமையானஆட்சேபனை:

பன்முக பிராண்ட் சில்லரை வணிகத்தில் 51 சதவீத அந்நிய நேரடி முதலீட்டினை நமது
எதிர்ப்பினையும் மீறி சில நிபந்தனைகளுடன் மத்திய அரசு எற்கனவே அனுமதித்துள்ளது. பலசரக்கு, காய்கறி, பழங்கள் ஆகிய பொருட்களுக்காகவது அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிக்கக் கூடாது என நமது சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

இச்சூழ்நிலையில் தற்போது பெரும் பன்னாட்டு சங்கிலித் தொடர் சில்லரை நிறுவனங்கள் வற்புறுத்தலைத்
தொடர்ந்து மேற்கண்ட நிபந்தனைகளையும் மத்திய அரசு தளர்த்தி வருவதற்கு நமது கடுமையான
ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்கிறோம். 2011-ம்ஆண்டுமக்கள் தொகை அடிப்படையில்
10 லட்சத்திற்கு குறைவாக மக்கள் தொகை கொண்ட நகரங்களிலும் விற்பனை நிலையங்களைத்
திறக்க பன்னாட்டு சில்லரை வணிக நிறுவனங்களுக்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிறுதொழில் நிறுவனங்களிடமிருந்து 30 சதவீதம் கொள்முதல் செய்வது மற்றும் உள் கட்டமைப்பில் முதலீடு செய்வது ஆகிய விதிகளும் தளர்த்தப்படுகின்றன. அந்நிய முதலீட்டாளர்கள் விற்பனைக்காக சரக்குகளை வாங்கும் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் இயந்திரங்கள் மற்றும் தளவாடங்கள் முதலீடு ரூ. 12 கோடி வரை இருந்தாலும் அவர்களிடம் சரக்குகளை கொள்முதல் செய்யலாம். முன்பு இந்த வரம்பு ரூ. 6 கோடியாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு கட்டுப்பாடுகளும், நிபந்தனைகளும் தளர்த்தப்பட்டுள்ளதால் நம் நாட்டின் சில்லரை வணிகத்தில் கூடிய விரைவில் கணிசமான அளவு அந்நிய நேரடி முதலீடுகள் வரவேண்டும் என அரசு எதிர்பார்க்கிறது. நம் நாட்டுக்கு கட்டமைப்பு மேம்பாடு முதலியவற்றில் அந்நிய நேரடி முதலீடு தேவைதான்.

ஆனால் பன்முக பிராண்ட் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதித்தால் நம் நாட்டில் பரம்பரையாக சில்லரை வணிகத்தில் ஈடுபட்டு வரும் 4 கோடி வணிகர்களும், அவர்களை நம்பியுள்ள 20 கோடி மக்களும் வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும், விவசாயிகளும், சிறுதொழில் துறையினரும் தங்கள் உற்பத்திப் பொருட்களை பன்னாட்டு நிறுவனங்கள் நிர்ணயிக்கும் விலைக்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வேலையில்லாமல் இருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும். உணவுப் பொருள் விநியோகத்தை அந்நியர்களிடம் ஒப்படைத்தால் நம் நாட்டின் இறையாண்மைக்கு ஆபத்து ஏற்படும்.

எனவே நமது சங்கம் சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீட்டினை அனுமதிப்பதற்கு தொடர்ந்து
கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பன்முக சில்லரை வணிகத்தில் அந்நிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படமாட்டாது என்று தமிழக முதல்வர் அவர்கள்
உறுதி அளித்திருப்பது ஆறுதல் தருவதாக உள்ளது.

சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமும் (Goods and Services Tax), நேரடி வரித் தொகுப்பும் (Direct Tax Code) விரைவில் அமல்படுத்தப்படவேண்டும்:

தொழில் துறையினர் மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ள, இந்திய அளவில் அனைத்து மறைமுக வரிகளையும் ரத்து செடீநுதுவிட்டு ஒரே வரியான புதிய சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டமும்
நேரடி வரி தொகுப்பும் விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும்.

புரட்சிகரமான இவ்விரு சட்டங்களும் நம் நாட்டின் வரிச் சட்ட நடைமுறைகளை எளிமையாக்கி தொழில் வணிக வளர்ச்சியை, குறிப்பாக தொழில் துறையில் அன்னிய முதலீடுகளை பெருமளவில் ஊக்குவிக்கும் என்பது நிச்சயம்.

மதுரையிலிருந்து துபாய், சிங்கப்பூர், அபுதாபி, மலேசியா (கோலாலம்பூர்) ஆகிய நாடுகளுக்கு நேரடி விமான சேவை விரைவில் துவங்கப்பட நமது வர்த்தக சங்கம் தொடர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றது:

நம் சங்கத்தின் தொடர் முயற்சி காரணமாக மதுரை விமான நிலையத்தில் சர்வதேச தரத்துடன்கூடிய
அதி நவீன முனையக் கட்டிடம் கட்டப்பட்டு இயங்கி வருகிறது. விமான ஓடுதளம் 7500 அடியாக
நீட்டிக்கப்பட்டுள்ளது; விமான நிலையம் சுங்கவரி விமான நிலையமாகவும் சர்வதேச சரக்குகளை கையாளும் விமான நிலையமாகவும் அறிவிக்கப்பட்டுவிட்டது. ஸ்பைஸ் ஜெட் மற்றும் மிகின்லங்கா நிறுவனங்கள் மதுரைக்கும் கொழும்புவிற்கும் இடையே விமான சேவையை இயக்கி வருகின்றன.

நம் மதுரை விமான நிலையத்தை பிற நாடுகளுடன் செடீநுது கொண்டுள்ள இருவழி விமான சேவை ஒப்பந்தங்களில் சேர்க்க வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்கிடையே நம்நாட்டு விமான நிறுவனங்களையும் அணுகிவருகிறோம்.

இந்தியாவின் ஜெட்ஏர்வேஸ் மற்றும் முக்கிய அரபு நாடான அபுதாபியை தலைமையகமாக கொண்ட எடிகாட் ஏர்வேஸ் இடையே கையெழுத்திடப்பட்டுள்ள சரித்திர முக்கியத்துவம் வாழ்ந்த கூட்டு விமான சேவை ஒப்பந்தத்திற்கு மத்திய அரசின் பன்னாட்டு முதலீடு அபிவிருத்தி வாரியம் ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து மதுரைக்கும்-அபுதாபிக்கும் இடையே நேரடி விமான சேவையை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் துவங்க வேண்டும் என அதற்கான காரணங்களுடன் ஜெட் ஏர்வேஸின் தலைவர் திரு. நரேஷ் கோயலை நாம் வலியுறுத்தியுள்ளோம்.

அதேபோல நம் நாட்டின் டாடா சன்ஸ் மற்றும் டெலிஸ் டிரா டிரேட் பிளேஸ் நிறுவனங்களுடன் மலேசியாவின் ஏர் ஏசியா கூட்டு ஒப்பந்தம் செய்து ஏர் ஏசியா இந்தியா என்ற புதிய நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அந்நிறுவனம் மதுரை-கோலாலம்பூர் இடையே நேரடி விமான சேவையைத் துவக்க வேண்டும் என தொடர்ந்து அந்த நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறோம்.

ஏர் ஏசியா நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திரு.டோனி பெர்னான்டஸ், மத்திய தொழில் வர்த்தக இணை அமைச்சர் டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் அவர்களிடம் மதுரை-கோலாலம்பூர் இடையே இவ்வாண்டு இறுதிக்குள் ஏர் ஏசியா நேரடி விமான சேவையைத் துவங்குமென வாக்குறுதி அளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது.

இரு தினங்களுக்கு முன் மதுரைக்கு வருகை புரிந்த ஏர் இந்தியா ஏர் இந்தியா எக்ஸ்பிரஸின்
கமர்சியல் மற்றும் கிரவுண்ட் ஹாண்டிலிங் பொது மேலாளர் திரு ராதாகிருஷ்ணன் அவர்களை
சந்தித்து மதுரை- துபாய் மற்றும் மதுரை-சிங்கப்பூர் அல்லது சிங்கப்பூர்-மதுரை-துபாய் இடையே நேரடி விமான சேவையை ஏர் இந்தியா/ ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வரும் குளிர்காலஅட்டவணையில் சேர்த்து துவங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் திரு வேணுகோபால் அவர்களும் இது குறித்து உறுதியளித்துள்ளார்கள்.

விரைவில் அச்சேவைகள் துவக்கப்படக் கூடும் என்று நம்புகிறோம். ஸ்பைஸ் ஜெட் நிறுவனமும் விரைவில் மதுரை-சிங்கப்பூர் இடையே நேரடி விமானசேவையைத் துவங்கும் எனத்தெரிகிறது. இவ்விமானச் சேவைகள் அனைத்தும் துவங்கப்பட்ட பின்னர் தென் தமிழகத்திலிருந்து மலேசியா, சிங்கப்பூர், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்வோருக்கும் அங்கிருந்து இங்கு வருபவர்களுக்கும் பயண நேரமும், செலவும் கணிசமாகக் குறைந்திட வாய்ப்பு ஏற்படும்.

பல்வேறு இதர நாடுகளுக்கும் இங்கிருந்து விரைவாக விமானப் பயணம் மேற்கொள்ள இயலும்.
அத்துடன் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் தொழில் முதலீடுகள் இப்பகுதியில்
செய்யப்படுவதற்கும் சுற்றுலாப் பயணிகள் வருவதற்கும், ஏற்றுமதி வணிகம் பெருகுவதற்கும் நல்ல வாய்ப்பு ஏற்படும். இதன் மூலம் தென் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி மேம்பாடு அடையும் என்பதுஉறுதி.

நம் சங்க வர்த்தகத்தூதுக் குழுவின் வெற்றிகரமான அமெரிக்க பயணம்:

நமது சங்கத்தின் வர்த்தகத் தூதுக்குழு இதுவரை இலங்கை, மாலத்தீவு, சீனா, மொரிஷியஸ், தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு நாடுகள், இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா ஆகிய 11 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அந்நாடுகள் இருவழி வர்த்தகம் மற்றும் தொழில் முதலீடு அதிகரிக்க வழி வகுத்துள்ளது. தற்போது நம் சங்கத்தின் சார்பில் பல்வேறு தொழில் வணிகத்தில் ஈடுபட்டுள்ள 45 உறுப்பினர்களைக் கொண்ட வர்த்தகத் தூதுக்குழு கடந்த ஜுன்மாதம் 17 முதல் 27 வரை, நம் தூதுக்குழு செல்லும் 12-வது நாடாக அமெரிக்காவுக்கு சென்றுவந்துள்ளது.

இருவழி வர்த்தகம், உரிமை வணிகம் மற்றும் முதலீடு மேம்பாட்டிற்காக மேற்கொள்ளப்பட்ட இத்தூதுக்குழுவிற்கு நான் தலைவராகவும், நமது முதுநிலை தலைவர் திரு. இரத்தினவேல் ஆலோசகராகவும், திரு.திருப்பதிராஜன் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டனர்.

சென்னையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் வர்த்தக சேவைப் பிரிவு, இந்தியாவிலேயே முதன் முதலாக தமிடிநநாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஒத்துழைப்புடன் மதுரையில் அமெரிக்க வர்த்தக மையத்தை ஏற்படுத்தி இருப்பதின் காரணமாகவும், அமெரிக்காவின் திறம் சார்ந்த கூட்டாண்மை திட்டத்தின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை அமெரிக்காவுடன் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் ஏற்படுத்திக்கொண்டுள்ளதன் காரணமாகவும், சென்னையிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்தின் முதுநிலை வர்த்தக வல்லுநர் திருமதி. மாலா வெங்கட் தூதரகத்தின் பிரதிநிதியாக தூதுக்குழுவுடன் அனுப்பப்பட்டார்.

நமது சங்கத் தூதுக்குழுவினர் நியூயார்க் நகரில் நடைபெற்ற சர்வதேச உரிமை வர்ததகக் கண்காட்சியை பார்வையிட்டு அக்கண்காட்சியில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த 400-க்கும் அதிகமான உரிமை வர்த்தகம் அளிக்க விரும்பும் நிறுவனங்களுடன் தமிழ்நாட்டிற்கு ஏற்ற வணிகம் மற்றும் சேவைகளில் உரிமை வர்த்தக உடன்பாடு செய்து கொள்வது குறித்து விரிவான பேச்சுவார்த்தை நடத்தினர். கூடிய விரைவில் பல்வேறு உரிமை வணிக உடன்பாடுகள் கையெழுத்திடப்பட உள்ளன. நியூயார்க் மேயர் அலுவலகத்தில் சர்வதேச விவகார மற்றும் வர்த்தக பிரிவின் இயக்குனர் திருமதி எலிசபத் ரோஸ் டேலி, வாஷிங்டனின் அமெரிக்க வர்த்தக இலாகாவின் உதவித் தலைமை இயக்குனர் திருமதி ஜுடி ரெயின்கே, மூத்த பொருளாதார அதிகாரி டாக்டர் அப்துல் ஷேக் மற்றும் அமெரிக்க அரசின் பல்வேறு உயரதிகாரிகளையும் நமது தூதுக் குழுவினர் சந்தித்து இருவழி வர்த்தக மேம்பாடு குறித்து விரிவான கலந்துரையாடல் மேற்கொண்டுவந்துள்ளனர்.

நம் வர்த்தகத் தூதுக் குழுவின் அமெரிக்க பயணம் குறித்த செய்தி நமது சங்கத்தின் மே-ஜுலை 2013 வணிக இதழில் படங்களுடன் விரிவாக வெளியிடப்பட்டுள்ளது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். உலக அளவில் முதன்மையான பொருளாதாரத்தைக் கொண்ட நாடான அமெரிக்காவுடன் தென் தமிழகத்தின் இருவழி வணிகம் மற்றும் முதலீடு மேலும் அதிகரிக்க நமது சங்கத்தூதுக்குழுவின் அமெரிக்க பயணம் நல்ல அடித்தளம் அமைத்துள்ளது.

தொழில் வணிகத் துறையினருக்கும், பொது நலனுக்காகவும் தன்னிகரற்ற முறையில் சேவைகள்
ஆற்றிவரும் நம் சங்கத்தின் பணிகளை மேலும் விரிவாக்கவும், சிறக்கச் செய்திடவும் நமது முதுநிலை தலைவர் திரு.இரத்தினவேல் அவர்களின் சீரிய வழிகாட்டுதலுடன், சங்கத்தின்இதர நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் உங்களைப்போன்ற அங்கத்தினர்களின் ஒத்துழைப்புடன் தொடர்ந்து அயராது முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்நன்னாளில் உங்கள் அனைவருக்கும்உறுதிஅளிக்கிறேன்.

நம் சங்கத்தின் சார்பில் நடைபெறும் 67-வது விடுதலைநாள் விழாவில் பங்கேற்றுள்ள உங்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்து எனது விடுதலைநாள் விழா உரையினை நிறைவு செய்கிறேன்.