மத்திய இடைக்கால பட்ஜெட் – தொழில் வர்த்தகத் துறையினருக்கு ஏமாற்றம்
February 18, 2014
அமெரிக்கா – இந்தியா இடையிலான வர்த்தகம் 100 பில்லியன் டாலர்களை எட்டும்
March 7, 2014

அமெரிக்காவை அணுகுங்கள்

Newyorkதமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கமும், சென்னையிலுள்ள அமெரிக்க கான்சுலேட் வர்த்தகத் துறைப் பிரிவும் இணைந்து Access America (அமெரிக்காவை அணுகுங்கள்) என்ற தலைப்பில் விரிவான நிகழ்ச்சி ஒன்றினை 07.03.2014, வெள்ளிக்கிழமை காலை 10.15 முதல் மாலை 5.00 மணி வரை மதுரை, காமராஜர் சாலையிலுள்ள வர்த்தக சங்க பவள விழா ஹட்சன் பேரவை அரங்கில் நடத்த உள்ளன.

அமெரிக்காவை அணுகுங்கள்:

இந்தியா-அமெரிக்கா இடையே இருவழி வர்த்தகம் வளர்ச்சியடையத் தேவையான அனைத்து விபரங்களையும் அளித்து சிறப்பான சேவை செய்து வரும் சென்னையிலுள்ள அமெரிக்க வர்த்தக சேவைத் துறை (US Commercial Service) இந்நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்காவில் தொழில் வணிகம் துவங்குவதற்கும், ஏற்றுமதி, இறக்குமதி வாய்ப்புகள் குறித்தும், அந்நாட்டிலுள்ள மேற்படிப்பு வாய்ப்புகள் குறித்தும் வேண்டிய தகவல்களையும், விசா பெறுவதற்கான நடைமுறைகள் பற்றியும் இந்நிகழ்ச்சியின் மூலம் தொழில் வணிகத் துறையினருக்கும், கல்லூரி மாணவ மாணவியருக்கும் தேவையான விளக்கமும், ஆலோசனையும் அளிக்க உள்ளது.

புதுடில்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தின் வர்த்தகத் துறைக்கான உயர் அதிகாரி திரு.ஜான் மெக்காலின், சென்னையிலுள்ள அமெரிக்க கான்சல் ஜெனரல் திருமதி ஜெனிபர் A மெக்ன்டைர் மற்றும் முதன்மை வர்த்தக அதிகாரி திரு.ஜேம்ஸ் கோல்சன் ஆகியோர் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்று உரையாற்றி தேவையான விளக்கங்கள் அளிக்க உள்ளனர்.

தொழில் முனையும் மகளிர் மேம்பாட்டு மையத்தின் ஆண்டு விழா மற்றும் மகளிர் தினக் கொண்டாட்டம்:

தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் ஆதரவுடன் செயல்படும் தமிழ்நாடு சேம்பர் பவுண்டேசனின் ஓர் அமைப்பான தொழில் முனையும் மகளிர் மேம்பாட்டு மையம் (Women Entrepreneurs – WE) அதன் ஆண்டு விழாவையும், மகளிர் தினத்தையும் 08.03.2014 சனிக்கிழமை காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வர்த்தக சங்கத்தின் மேற்குறிப்பிட்ட அரங்கத்தில் சிறப்பான முறையில் கொண்டாட உள்ளது.

சென்னையில் உள்ள அமெரிக்க கான்சல் ஜெனரல் திருமதி.ஜெனிபர் A மெக்ன்டைர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறார். மதுரை மாவட்ட ஆட்சியர் திரு.L.சுப்பிரமணியன், IAS விழாவில் கலந்து கொள்கிறார். தொழில் முனையும் மகளிர் மேம்பாட்டு மையத்தின் சென்னை மற்றும் கோயம்புத்தூர் கிளைகள் இவ்விழாவில் துவக்கப்பட உள்ளன. பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.